சீனாவின் திட்டத்தை சுக்குநூறாக உடைத்த டெல்லி G20: ஆசிய நாடுகளை ஆக்கிரமிக்க பார்த்த சீனாவுக்கு வேட்டு - ஓர் அலசல்!
The Belt and Road Initiative என்ற தந்திரமான திட்டத்தை சீனா செயல்படுத்தி வந்தது. ஒரு தனி நாடு செயல்படுத்த போகும் மிகப்பெரிய திட்டமாக இந்த The Belt and Road Initiative கருதப்படுகிறது. இதனை ஆரம்பத்தில் இருந்தே இந்தியா எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக இந்தியாவின் நடந்த ஜி20 மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கு முன் திட்டத்தின் பிண்ணணி பற்றி பார்ப்போம்.
அப்படி என்ன இருக்கிறது இந்த திட்டத்தில்?
உலகம் முழுக்க இருக்கும் நாடுகளை சீனாவுடன் இணைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். 2013ல் அறிவிக்கப்பட்டது. 160 நாடுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் கனவு திட்டம் என அந்நாட்டு மக்கள் சொல்கின்றனர். இதுவாகும். The Belt and Road Initiative என்ற பெயரில் இருக்கும் தி பெல்ட் என்பது உலகம் முழுக்க சீனா அமைக்க உள்ள சாலைகளை குறிக்கிறது. ரோட் என்பது உலகம் முழுக்க சீனா கடல் வழியாக ஏற்படுத்த உள்ள கடல் போக்குவரத்தை குறிக்கிறது. இந்த திட்டம் சீனா அரசியலமைப்பில் ஒரு அங்கமாக 2017ல் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் உலகில் இருக்கும் நாடுகளின் பகுதிகளை சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலம் இணைக்கும். சாலைகள் அமைத்து சீனாவிற்கும் பிற நாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும். கடல் வழியே போக்குவரத்தை ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் பிற துறைமுகங்கள் உடன் இணைக்கும்.
மறைந்து இருக்கும் உள்நோக்கம்
இந்தியா உலகம் முழுவதையும் தனது குடும்பமாக பார்க்கிறது என பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் சீனா பிற நாடுகளுடனான உறவையும் தந்திரமாக பார்க்கிறது. முதலில் The Belt and Road Initiative திட்டத்திற்கு One Belt One Road Strategy என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் இதில் இருக்கும் ஸ்டிரேட்டஜி என்ற வார்த்தை பல நாடுகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதேபோல் ஒன் என்ற வார்த்தையும் பல நாடுகளுக்கு கோபத்தை உண்டாக்கியது. இதனை கண்டு பயந்த சீனா The Belt and Road Initiative என திட்டத்தின் பெயரை மாற்றி உள்ளது.