ஆளும்கட்சி MLA என்று கூட பயமில்லாமல் சம்பவம் செய்த பொதுமக்கள்!

Update: 2023-06-29 04:40 GMT

தேனியில் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான கம்பம் ராமகிருஷ்ணன் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் சென்ற நிகழ்ச்சிக்கு போது சென்ற ஏற்பட்ட சர்ச்சை தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இவர் நிகழ்ச்சிக்கு சென்று இடத்தில் இளைஞர்கள் சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது இவருடைய தொகுதிக்குட்பட்ட தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் என்ற கிராமத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடைகள் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.


இந்த முகாமிற்காக இவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இருந்தார். மேலும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் அழைக்கப்பட்டு இருக்கிறார் என்பதை அறிந்தவுடன் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக கூடி விட்டார்கள். அதிலும் பார்த்தால் இவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க தான் கூடியிருக்கிறார்கள் என்று நினைத்து விடாதீர்கள்,

தங்கள் பகுதியில் உள்ள குறைகளை சட்டமன்ற உறுப்பினருக்கு எப்படியாவது கூற வேண்டும் என்ற உள் நோக்கத்திற்காக தான் பொது மக்கள் கும்பலாக கூடி எம்எல்ஏ சுற்றிவளைத்தார்கள். குறிப்பாக நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுது அந்த விழாவிற்கு வருகை தந்த மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தினர் விழாவில் கலந்து கொண்ட கம்பம் சட்டமன்ற உறுப்பினரை வழிமறித்து மலைமாடுகளை வனப்பகுதியில் மேய்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி அவரை முற்றுகையிட்டனர்.


அது மட்டுமல்லாது அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் தொடர்ச்சியாக அடிக்க வைத்தார்கள். தங்கள் பகுதியில் குடிநீர் உட்பட எந்தவித அடிப்படை வசதியும் முறையாக இல்லை என்று கூறி கம்பம் தொகுதிக்குட்பட்ட கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது எம்எல்ஏ உடனடியாக தங்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரு முடிவை கூற வேண்டும் என்று விழா நடைபெற்ற தனியார் மண்டபத்தின் கதவை பூட்டிக்கொண்டு கம்பம் சட்டமன்ற உறுப்பினரை சிறை வைத்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதத்தில் தங்கள் ஊருக்கு அடிப்படை வசதியான தண்ணீர் வசதி, சாலை வசதி, சாக்கடை வசதி போன்ற எதுவும் செய்யப்படவில்லை என்றும், மலை மாடுகளை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் வனப்பகுதியில் மேய்ப்பதற்கு தாங்கள் அனுமதி உடனே வழங்க வேண்டும் என்று கூறியும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


எங்கள் ஊருக்கு எந்த நன்மையும் செய்யாத நீங்கள் ஏன் அரசு நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்ள எங்கள் ஊருக்கு வருகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களுடன் கெஞ்சி மன்றாடி உடனடியாக உங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறி அங்கிருந்து வெகு நேரத்திற்கு பிறகு கிளம்பி இருக்கிறார்.

இந்த ஒரு பிரச்சனை பெரும் பூதாகரமாக மாறத் தொடங்கிய பிறகு போலீசார் அந்த பகுதிகளில் குவிக்கப்பட்டு எம்எல்ஏ விற்கும் பாதுகாப்பு அளித்து இருக்கிறார்கள், அதுமட்டுமில்லாமல் இந்த ஒரு பிரச்சனை பற்றி மேலிடம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News