எங்கு பார்த்தாலும் சனாதன தர்மம் தான்... கதறலை தொடங்கிய கம்யூனிஸ்ட் MP சு.வெங்கடேசன்...
இந்தியாவில் தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த பாராளுமன்றத்திற்கு பதிலாக புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது கட்டுமான பணிகள் முடிந்து விட்டது. 2023 மே 28-ந் தேதி, பிரதமர் மோடி இந்தியாவின் பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து இருக்கிறார்.
ரூ.850 கோடிக்கும் மேலாக செலவிட்டு பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும், கூட்டுக்கூட்டத்தில் 1,272 பேரும் அமரவும் இருக்கை வசதியுடன் இந்தப் புதிய கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. அரசியல் சாசன மண்டபம், உறுப்பினர்களுக்கான ஓய்வறைகள், நூலகம், நிலைக்குழு விசாரணை அறைகள், உணவு விடுதி, வாகன நிறுத்துமிடம் என இந்த நாடாளுமன்ற கட்டிடம் பல்வேறு வசதிகளுடன் அமைகிறது. 65 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவில் புதிய பாராளுமன்றம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் போதுமான அளவுக்கு இடவசதியும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலும் பல வசதிகள் உள்ளன.
தமிழ்நாட்டு ஆதீனங்களில் ஆசியுடன் நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் குரலாக செங்கோல் ஒலிக்கும். செங்கோல் புனிதமானது, முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டின் செங்கோல் நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும். ராஜாஜி மற்றும் ஆதீனத்தின் பங்களிப்பில் செங்கோல் உருவாக்கப்பட்டது. இப்படி பல்வேறு பெருமைகளை வாய்ந்த செங்கோல் தற்போது நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. ஆனால், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. மேலும் தமிழகத்தின் செங்கோல் வைப்பதற்கு எதிர்க்கட்சிகளும் மற்றும் இடதுசாரிகளும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார்கள்.