மதத்தின் பெயரால் சட்ட விரோத காரியங்களை செய்யும் NGO'க்கள் ! - சாட்டையை சுழற்றும் உள்துறை அமைச்சகம் !

NGO க்களின் உரிமம் ரத்தானதற்கான உண்மை காரணங்கள்

Update: 2021-09-27 10:30 GMT

 மத்தியில் ஆளும் அரசின் மீது ஒரு பிம்பம் கட்டமைகப்பட்டுள்ளது, அதாவது சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுப்படுகிறது அவர்களின் உரிமையை பறிக்கிறது என பரப்புரை மேற்கொள்ளபடுகிறது.

ஏன் அந்த பரப்புரை மேற்கொள்ளபடுகிறது என பலருக்கு குழப்பம் இருக்கும். அதுவும் சமீபமாக அதிகம் இந்த சொல்லாடல் பயனபடுத்த படுகிறதே அதன் காரணம் என்ன?

அதி முக்கிய காரணங்களில் ஒன்று கிறுஸ்துவ மற்றும் இஸ்லாமிய என்ஜியோக்களின் உரிமத்ததை அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு தான் இந்த சமீபத்திய பரப்புரைக்கு காரணம். அதெல்லாம் சரி அந்த என்ஜியோக்கள் தடை விதிக்கப்பட்டது, உரிமையை பறிப்பதற்கு தானே என இங்கு சிலர் கூறுகின்றனர்.

ஆனால் , அந்த 6 என் ஜி யோக்கள் ஏன் தடை செய்யப்பட்டன என பார்ப்போம். முதலில் இந்த ஆறு என் ஜி யோக்கள் குழந்தைகள் மீது பாலியல் தொல்லை, மதமாற்றம் போன்ற செயல்களை ஊக்குவிக்கிறது. மேலும், வெளிநாட்டில் இருந்து வந்த நிதிக்கு முறையான கணக்குகளை சமர்ப்பிக்க வில்லை எனவும் கூறப்படுகிறது.







 



 


பெங்களூருவில் அமைக்கபட்டுள்ள ஹோலி ஸ்கிரிப் அமைப்பின் பதிவு கடந்த 2017 ஆம் ஆண்டு ரத்து செய்யப்படது ஆனாலும் அவர்கள் வெளிநாட்டு நிதியை LLC மூலம் பெற்றுவந்தனர். அதனால் அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது

அடுத்ததாக ஹெவன்லி கிரேஸ் என்ற ஓரிசாவை சேர்ந்த அமைப்பு வறுமையில் வாடும் மக்களுக்கு சேவையாற்றுவதாக கூறுகிறது. இவை LLC மூலம் நிதி பெறுவதால் இதன் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கி வந்த ரஸ் அறகட்டளையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடைபெறுவதாக தகவல்கள் வந்தன. இதனை அடுத்து 10 வயது குழந்தை மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் அந்த என் ஜிவோ வின் இயக்குனர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

அடுத்ததாக கேரளாவை சேர்ந்டஹ் இஸ்லாமிய என் ஜி வோ ஒன்று தான் பெற்ற  வெளிநாட்டு நிதிக்கான முறையான கணக்கை தாக்கல் செய்யவில்லை. முக்கியமாக வளைகுடா நாடுகளில் இருந்து வந்த சுமார்146 கோடிக்கான கணக்கு தாக்கல் செய்யபடவில்லை.

இந்துக்களை மதமாற்றம் செய்ததாக MTEW மற்றும் AHEWF என் ஜி யோக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அவற்றின் உரிமத்தை நிறுத்தி வைத்துள்ளது அரசு.

இந்த என் ஜி யோக்கள் முறையான ஆவணங்களை தாக்கல் செய்யும் பட்சத்தி அதற்கான உரிமம் திரும்ப தரப்படும் என அரசு கூறியுள்ளது. இப்படி சட்டவிரோத சம்பவங்களில் ஈடுப்பட்ட என் ஜி யோக்களின் உரிமத்தை நிறுத்தி வைப்பதற்கு இங்கு பலர் வன்மம் பரப்புவதற்கான காரணம் உங்களுக்கு புரிந்து விட்டது எனில் அவரகளின் நோக்கமும் புரிந்து விடும்.

தங்களால் வெளிநாட்டு நிதியை கொள்ளை அடிக்க முடியவில்லை என்ற வயிற்றெரிச்சலில் இருப்பதே அரசின் மீதான அவர்களின் எதிர்மறை பரப்புரைக்கு காரணம்.

Hindu Post

Tags:    

Similar News