தி.மு.க பரப்பும் பொய்யுரையும்! RSS உண்மை முகமும்! வெளியில் தெரியாமல் பார்த்துக்கொண்ட ரகசியம்!
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் எனப்படும் RSS இயக்கம் இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு ஆகும். இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று கே. பி. ஹெட்கேவர், பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே, கணேஷ் தாமோதர் சாவர்க்கர், விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் இலட்சுமன் வாமன் பரஞ்பே ஆகியோரால் நிறுவப்பட்டது. சங்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வடஇந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகம். இதற்கு மிக முக்கிய காரணம், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி "இந்து" என்ற அடையாளத்துடன் ஒன்று சேர்வோம் என்பதாகும்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. தென்னாப்பிரிக்காவில் தெற்காசிய நண்பர்கள் என்ற பெயரிலும், மியான்மரில் சனாதன் தர்ம சுயம்சேவாக் சங்கம், மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம், மற்றும் ஐக்கிய அமெரிக்க நாட்டில் இந்து சுயம்சேவாக் சங்கம் என்ற பெயரில் இயங்குகின்றது.
முக்கியக் கொள்கை கலாச்சார தேசியவாதம் எனப்படுகிற முழு மனிதப்பற்றைக் கொண்டு உயிரான, தனித்துவம் மற்றும் நன்னெறிகளைக் கொண்ட பாரம்பரிய இந்தியாவிற்கு புத்துயிர் அளிப்பது தேசத்துக்கு சேவை செய்வதை பாரத மாதா சேவை செய்வதாகக் கொண்டு இந்தியாவை தன் தாய் நாடாக நினைத்து அதை பாதுகாப்பது. ஆர்.எஸ்.எஸ் நேரடியாக தேர்தலில் பங்கு கொள்வதில்லை. அதன் கொள்கையை ஒற்றிருக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்கும்.
எந்த கட்டுப்பாடும் இல்லை
ஆர் எஸ் எஸ் அமைப்பில் உறுப்பினரான சேர எவ்வித நடைமுறையும் இல்லை. உறுப்பினர் கட்டணம், அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. தன்னார்வலர்கள் அருகில் உள்ள ஆர்எஸ்எஸ் கிளைக்குசென்று தானாக உறுப்பினராக இணைந்து கொள்ள வேண்டியது தான். இவ்வமைப்பில் உறுப்பினர்களின் விவரங்கள் குறித்துக் கொள்ளப்படுவதில்லை. ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் பயிற்சியின் போது வெள்ளை நிற சட்டை, காக்கி நிற அரைக்கால் டவுசர் அணிந்து இருப்பர். தற்போது காக்கி நிற அரைக்கால் டவுசருக்கு பதிலாக பழுப்பு நிற முழுக்கால் டவுசர் அணிய தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் சர்சங்கசாலக் என்ற பெயரில் தேசியத் தலைவரும் மற்றும் பொதுச் செயலாளர் தலைமையில் அமைப்பு நிர்வாகிக்கப்படுகிறது. மாநில, மாவட்ட மற்றும் கிளைகள் அளவில் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர் தலைமையில் அமைப்பு செயல்படுகிறது.