பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யாவின் சமீபத்திய கைது.....! பின்னணியை அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிக்கை...!

Update: 2023-08-05 05:35 GMT

தமிழக பாஜக மாநில செயலாளராக இருக்கும் SG சூர்யா அவர்களை கடந்த ஜூன் மாதம் ஏழாம் தேதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தூய்மை பணியாளர்களின் மரணத்திற்கு எதிராக கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். ஆனால் அதில் கடலூர் என்பதை குறிப்பிடுவதற்கு பதிலாக மதுரை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது தான் தவறாக கருதப்பட்டது. பிறகு மதுரை என்பது மாற்று செய்யப்பட்டு கடலூர் என்று குறிப்பிடப்பட்டு மற்றொரு அறிக்கையை அவருடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில் சொல்லப்பட்டிருந்த செய்தி முற்றிலும் உண்மைதான், அதை யாரும் மறுப்பதற்கு இடம் இல்லை. குறிப்பாக கடலூர் பெண்ணாடம் பேரூராட்சி பன்னிரண்டாவது வார்டு உறுப்பினராக விசுவநாதன் என்பவர் பதவி வகித்து வருகிறார். அவர் அங்கு இருக்கும் தூய்மை பணியாளரை மனித கழிவுகள் கலந்த நீரில் கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதாகவும் அதனால் வேலை செய்தவருக்கு ஒவ்வாமை ஏற்பட்ட அவர் உயிரிழந்த ஒரு சம்பவமும் பரபரப்பில் ஏற்படுத்தியது.


சம்பந்தப்பட்ட தொழிலாளி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அவருக்காக குரல் எழுப்ப வேண்டும் என்ற காரணத்திற்காக உடனடியாக இந்த செய்தியை கையில் எடுத்த SG சூர்யா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி பகிர்ந்து இருக்கிறார், பகிர்ந்ததுடன் தூய்மை பணியாளர் இறப்பிற்கு காரணமாக இருந்த கவுன்சிலரின் கம்யூனிஸ்ட் கட்சியை எம்.பு வெங்கடேசனுக்கு இதை குறிப்பிட்டு கேள்வியும் எழுப்பி இருந்தார்.  


இப்படி தங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த காரணத்தின் காரணமாக இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இரவோடு இரவாக 11.30 மணிக்கு சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த SG. சூர்யா அவர்களை காக்கி உடை அணியாமல் வந்த மதுரை போலீசார் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர். சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் இதற்கு கிளம்பியது.


குறிப்பாக இந்த கைதிற்க்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறும் பொழுது, "விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது. கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு. பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக் கொண்டிருக்கும்" என்று கூறினார்.


எனவே SG சூர்யா அவர்களின் கைது தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் இது பற்றி பேசப்பட்டது. குறிப்பாக கம்யூனிஸ்ட் தலைவராக இல்லாத ஒருவர் அவர்களுக்கு எதிராக கருத்துக்களை கூறும் பொழுது, அவர்கள் அந்த நபரை அடக்க பாக்குகிறார்கள். கம்யூனிசத்திற்கு ஆதரவாக இருக்கும் கட்சிகள் இதற்கு முழுமையாக ஒத்துப் போகிறது. தங்கள் மாநிலத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக ஒருவர் குரல் கொடுக்கும் போது அவர் குரலை எப்படி அடக்கலாம்? ஒடுக்கலாம்? என்பதை கம்யூனிஸ்ட் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று அமெரிக்காவை சேர்ந்த குளோபல் ஐ என்ற மாத இதழ் செய்தியை வெளியிட்டு இருக்கிறது.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் செய்யும் அடக்குமுறையை அமெரிக்க பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டிருப்பது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

Tags:    

Similar News