யோகி மாடல் VS திராவிட மாடல்.. தமிழ்நாட்டை ஒவர் டேக் பண்ணிய உத்திரபிரதேசம்..
தமிழ்நாட்டை முந்தி பொருளாதார வளர்ச்சியில் 2வது இடத்தைப் பிடித்து இருக்கிறது உத்தரப்பிரதேசம் மாநிலம். இனி வருங்காலத்தில் குறிப்பாக 2027 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் மைல்கல்லை எட்ட வேண்டும் என்ற முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் லட்சிய இலக்கை அடைவதற்கான முயற்சியிலும் உத்திரபிரதேச மாநில அரசாங்கம் களம் இறங்கி இருக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை உத்தரப் பிரதேசம் வெற்றிகரமாகப் பெற்றுள்ளது. இந்த முடிவை குறித்து பிரபல ஆன்லைன் தளமான soic.in யில் முடிவுகள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உத்திரபிரதேச மாநிலம் தற்போது பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு, குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தை விஞ்சியுள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வமான வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, "உத்தரப் பிரதேசம் இப்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறிப்பிடத்தக்க 9.2% பங்கைக் கொண்டுள்ளது. 15.7 சதவீத பங்குகளுடன் முன்னணியில் இருக்கும் மகாராஷ்டிராவிற்கு சற்று பின்னால் தன்னை நிலை நிறுத்துகிறது. இது முன்னர் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்த உத்தரப் பிரதேசத்திற்கு குறிப்பிடத்தக்க உயர்வைக் குறிக்கிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு (9.1%), குஜராத் (8.2%), மற்றும் மேற்கு வங்கம் (7.5%) போன்ற மாநிலங்களை விஞ்சியுள்ளது. கர்நாடகா (6.2%), ராஜஸ்தான் (5.5%), ஆந்திரப் பிரதேசம் (4.9%), மற்றும் மத்தியப் பிரதேசம் (4.6%) போன்ற மாநிலங்கள் உத்தரப் பிரதேசத்தை விட கணிசமாக பின்தங்கியுள்ளன.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், உத்தரப் பிரதேசம் கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஆட்சிக் காலங்களில் இருந்த பல்வேறு குற்றங்கள் இப்போது ஒழிக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு தொழில்துறை வேகமாக முன்னேறி வருகிறது. அது மட்டும் கிடையாது, உத்தரபிரதேசம் மாநிலம் தற்போது விரைவாக மற்றும் எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருந்து தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.