சட்டவிரோத மதமாற்றங்களுக்கு 11.72 கோடி - 'பிலடெலிபியா பெல்லோவ்ஷிப் சர்ச் ஆப் இந்தியா' மீது LRO புகார்! @Legallro
இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.
FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), பிலடெலிபியா பெல்லோவ்ஷிப் சர்ச் ஆப் இந்தியா (filadelfia fellowship church of india), சர்வதேச மதமாற்ற மாபியாக்களிடம் இருந்து 11.72 கோடி பெற்று சட்டவிரோத மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
இது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 25 (1) ஐ மீறுவதாகவும், இது தொடர்பாக கடும் விசாரணை வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கடிதம் எழுதியுள்ளனர்.
உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.