சட்டவிரோத மதமாற்றங்களுக்கு 1.54 கோடி - 'பிக் லைப் பெல்லோஷிப்' மீது LRO புகார்! @Legallro

Update: 2021-04-27 01:45 GMT

இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), சட்டவிரோத மதமாற்றங்களுக்கு 1.54 கோடி - 'பிக் லைப் பெல்லோஷிப்' மீது LRO புகார்! @Legallro ( Big Life Fellowship) என்ற அமைப்பு அமெரிக்காவை சேர்ந்த பிக் லைப் பெல்லோஷிப் ( Big Life Fellowship USA) USA விடமிருந்து சட்ட விரோத மதமாற்றங்களுக்காக 1.54 கோடி ருபாய் நிதிஉதவி பெற்றுள்ளது.

அதன் முக்கிய செயல்பாட்டாளர் பெஞ்சமின் பிரான்சிஸ் (Benjamin Francis), கேசல் குரோவ் பாபிடிஸ்ட் சர்ச் (Hazel Grove Baptist Church), நியூ கன்னான் சொசைட்டி (New Canaan Society), கார்ன்டன் பாப்டிஸ்ட் சர்ச் (Cornton Baptist Church) ஆகியவைகளிடமிருந்தும் நிதி உதவி பெறுகிறார். இது குறித்து விசாரணை கோரி LRO, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News