சட்டவிரோத மதமாற்றத்துக்கு ₹19 லட்சம் நன்கொடை - 'தி நியூ லைப் சென்டர்' மீது புகார்!

Update: 2021-07-02 06:10 GMT

இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதை கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் ஒடிசாவை சேர்ந்த நியூ லைஃப் சென்டர் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு (NGO) சர்ச்சைக்குரிய நிறுவனங்களிடமிருந்து நன்கொடையை பெற்றுள்ளதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதில் கம்பாஷன் ஈஸ்ட் இந்தியா (Compassion East India) என்ற என்ஜிஓ குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பு சட்டவிரோதமான மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் இருந்தது. அதன் தாய் அமைப்பான கம்பாஷன் இன்டர்நேஷனல் (compassion International) மத்திய அரசின் கிடுக்கிப்பிடி நிதி விதிகளுக்கு பிறகு நிரந்தரமாக இந்தியாவில் 2017இல் இழுத்து மூட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. இதற்கு முக்கியமான காரணமாக கம்பாஷன் ஈஸ்ட் இந்தியா அமைப்பு கூறப்பட்டது. கம்பாஷன் இன்டர்நேஷனல் நன்கொடை வழங்கும் பல அமைப்புகள் சட்டவிரோதமான மத மாற்றங்களை வெளிப்படையாகவே ஊக்குவிக்கின்றன என்று மத்திய அரசு குற்றம் சாட்டியிருந்தது.

தற்பொழுது இது போன்ற அமைப்பிடமிருந்து இந்த நியூஸ் சென்டர் நியூ லைஃப் சென்டர் 19 லட்ச ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைமை செயலாளர் அணிமேஷ் கிம்லா சட்டவிரோதமான மத மாற்றங்களுக்கு பெயர் போன மற்றொரு அமைப்பான ஆக்சன் எயிட் இந்தியா அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார். இந்த அமைப்பு சென்னையை அடித்தளமாக கொண்டு உள்ளது.

இதுதொடர்பாக விசாரணை வேண்டி LRO உள்துறை அமைச்சகத்திற்கு புகார் அளித்துள்ளது. உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விதிமீறல்கள் மட்டுமல்லாமல் தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News