1998 குண்டு வெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு உள்ள கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் - வெளிவரும் பகீர் தகவல்கள்

கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு உள்ளதாக பகீர் தகவல் வெளிவந்துள்ளது.

Update: 2022-10-26 14:45 GMT

கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு உள்ளதாக பகீர் தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலையில் நடந்த எரிவாயு சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உக்கடத்தை சேர்ந்த 23 வயதான தற்கொலைப்படையை சேர்ந்தவர் பலியான சம்பவம் தொடர்பாக ஐந்து இஸ்லாமிய தீவிரவாதிகளை கோவை நகர காவல் துறை கைது செய்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முகமது தர்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ், இஸ்மாயில் ஆகிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஐந்து பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இவர்கள் குறித்த பயங்கர தகவல்கள் வெளிவந்துள்ளன அதாவது தமிழக காவல்துறையின் விசாரணையில், இறந்த முக்கிய குற்றவாளியான ஜம்சா மொபினுக்கு கார் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட முகமது தர்கா 1998 கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியின் மகன் என்பது தெரிய வந்தது. பிப்ரவரி 1998ல் பாஜக தலைவர் அத்வானியை குறி வைத்து கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர். 23 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சையது அமுக்கது பாட்ஷாவின் தலைமையில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பான அல்உமா இயக்கத்துடன் தொடர்பு உடைய குண்டுவெடிப்புக்கு காரணம் எனவும் கண்டறியப்பட்டது.

பாட்ஷாவின் சகோதரர் நவாப் கானுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் 27 ஆண்டுகால தண்டனையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரின் கூறுவது படி முஹம்மது தர்கா நவாப் கானின் (அதாவது எஸ்.ஏ.பாஷாவின் மருமகன்) மகன் ஆவார்.


Source - The Commune

Similar News