2 லட்சம் கோடியா? யப்பா...! அண்ணாமலை வெளியிடப்போகும் திமுக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல்!

Update: 2023-03-23 12:27 GMT

திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை அதிரடியாக வெளியிட பாஜக தலைவர் அண்ணாமலை தயாராகிவிட்டார்.

தமிழகத்தில் குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக பாஜகவின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது, இதர கட்சிகளான திராவிட கட்சிகள் போல் வழக்கமாக செய்து வரும் சில அரசியல் பணிகளை கையில் எடுக்காமல் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் அந்த மக்கள் விரும்பும் மாற்றத்தை என்னால் கொடுக்க முடியும் என தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற சமயம் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

இதன் காரணமாக வழக்கமாக அரசியல் தலைவர்கள் கடைபிடிக்கும் சம்பிரதாயங்களை எல்லாம் அவர் தகர்த்தெறிந்தது மட்டுமல்லாமல் அரசியல்வாதிகள் என்பவர்கள் சேவை செய்ய வேண்டும், அரசியல்வாதிகள் குறிப்பாக ஆளும் கட்சி அமைச்சர்கள், பதவியில் இருந்தவர்கள் தனது சொத்து பட்டியலை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும், நான் அரசியலுக்கு வரும்பொழுது என்னுடைய சொத்து இவ்வளவு! அரசியலில் இத்தனை ஆண்டுகள் இருந்துள்ளேன்! என்னுடைய சொத்து இவ்வளவு என வெளியிட வேண்டும்! ஆனால் அவர்கள் யாரும் உண்மையான சொத்து விபரங்களை வெளியிடுவது இல்லை. மாறாக கணக்கு பொய்யான கணக்கை காண்பித்து வருகின்றனர், இவர்கள் மக்கள் சேவை செய்ய வரவில்லை அவர்களுக்கு சொத்து சேர்க்கவும், அவர்கள் குடும்பம் நன்றாக வாழவும் மட்டுமே அரசியலுக்கு வந்துள்ள என சில அரசியல்வாதிகளை குறிப்பிட்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

அதிலும் குறிப்பாக திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியது அரசியல் அரங்கை அதிரச்செய்தது, ஏனெனில் தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியும் சரி அது ஆளும் கட்சியாகட்டும், எதிர்கட்சியாகட்டும் மற்ற கட்சி அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிடுவேன் என தைரியமாக கூறியது கிடையாது, அப்படியே கூறினாலும் யாரேனும் ஒருவரை குறிப்பிட்டு விமர்சனம் செய்வார்களே தவிர ஒரு கட்சியின் ஒட்டுமொத்த அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிடுவேன் என எந்த அரசியல் கட்சித் தலைவரும் கூறியது கிடையாது. இப்படி இருக்கும் நிலையில் அண்ணாமலை கூறியது மக்களின் எதிர்பார்ப்பை எகிற செய்தது மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு தமிழக பாஜகவின் மேல் இருந்த மதிப்பை உயர்த்தியது.

தற்போது கசிந்த தகவல்களின்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தபடி திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல்களை பாஜக இணையதளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார். அரசின் பொங்கல் தொகுப்பு கொள்முதல், மின்வாரியத்தில் மின் திட்ட ஒப்பந்தம், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு கொள்முதல் போன்றவற்றில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தார்.

இது மட்டுமில்லாமல் முதல்வர் குடும்பத்தினர் வெளிநாடு பயணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உடன் சந்திப்பு தொடர்பாகவும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு சந்தேகங்களை எழுப்பினார். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு வரும் ஏப்ரல் 14 முதல் பாதயாத்திரை செல்லப் போகிறேன் நிலவும் அப்பொழுது திமுக அமைச்சரின் சொத்து பட்டியலில் வெளியிடுவேன் எனவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் கர்நாடகாவில் மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது, அம்மாநில தேர்தல் இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அந்த தேர்தலுக்காகவும் தற்பொழுது பணியாற்றி வருகிறார் அண்ணாமலை. தமிழ்நாடு, கர்நாடகம் என பம்பாரமாக அண்ணாமலை தற்பொழுது சுற்றிவருகிறார். இந்த நிலையில் அண்ணாமலை திட்டமிட்டபடி ஏப்ரல் 14ஆம் தேதி அவருடைய பாதயாத்திரை தொடங்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் கர்நாடகாவில் தேர்தல் பணிகள் இருக்கும் காரணத்தினால் அண்ணாமலை பாதயாத்திரை துவங்குவதில் சற்று தாமதம் ஏற்படலாம் என தெரிகிறது ஆனால் பாதயாத்திரை துவங்கவதில் தாமதம் ஏற்பட்டாலும் கூறியபடி சொத்து விபரங்கள் கண்டிப்பாக வெளியிடப்படும் என கமலாலய தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே அந்த விவரங்களின்படி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர்கள் மற்றும் திமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் எங்கெங்கு சொத்துக்களை வாங்கியுள்ளனர், எங்கெங்கு முதலீடு செய்து குவித்துள்ளனர்! அவர்கள் வாங்கிய அந்த சொத்தின் மதிப்பு எவ்வளவு? அது வாங்கும் பொழுது இருந்த மார்க்கெட் நிலவரம் என்ன? இன்றைய மார்க்கெட் நிலவரம் எத்தனை கோடிகளைத் தாண்டும் என்பது போன்ற துல்லியமான தகவல்களை எல்லாம் பட்டியல் செய்து வருவதாக அண்ணாமலை தரப்பு தெரிவிக்கிறது.

மேலும் இந்த விவரங்களை எடுத்து வெளியிட போகும் சமயம் தமிழக அரசியலில் அது ஒரு பரபரப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி திருப்புமுனையாகவும் அமையும் என அண்ணாமலை தரப்பினர் தெரிவிக்கின்றனர். இதுவரை பாஜக தரப்பு சேகரித்த தகவலின் படி முதல்வர் ஸ்டாலின் குடும்பம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் சேர்த்து வைத்த சொத்துக்களின் மதிப்புகளை கணக்கிட்டுப் பார்த்தால் இரண்டு லட்சம் கோடியை தாண்டும் என தெரிகிறது. இந்த விவகாரங்கள் வெளிவரும் பட்சத்தில் தமிழக அரசியல் இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் மேலும் இந்த விவகாரம் வெடிக்கும் பட்சத்தில் திமுக அமைச்சரவையில் இருக்கும் பல பலரின் அரசியல் அஸ்தமனத்தை முடிவு செய்யும் எனவும் தெரிகிறது.

Similar News