2ஜி விவகாரத்தை தோண்டி எடுத்த அண்ணாமலை..... ஆடியோவால் சிக்கிய ஆ.ராசா....!

Update: 2024-01-18 04:32 GMT

அண்ணாமலை வெளியிட்ட அடுத்த ஆடியோ சிக்கிய ஆ ராசா 


தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவ்வப்போது முன்வைத்து வருகிறார் அந்த வகையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டன்று திமுகவின் சொத்து பட்டியல் முதல் பாகத்தை வெளியிட்டார். 


அந்த சொத்து பட்டியலில் தமிழக முதல்வரின் மகன் மருமகன் மற்றும் திமுக அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களின் சொத்து விவரங்கள் அனைத்தும் இடம்பெற்று இருந்தது, இதனால் திமுக அமைச்சரவையில் மாற்றம் நிகழலாம் என்றும் அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் சொத்து பட்டியல்கள் தவறானவை அதற்கு ஆதாரங்கள் இல்லை அதனால் அண்ணாமலை எங்களுக்கு இழப்பு எடுத்து தர வேண்டும் என திமுக அமைச்சரவை சேர்ந்த ஒவ்வொரு அமைச்சர்களும் அண்ணாமலைக்கு எதிராக வழக்கு பதிந்ததும் குறிப்பிடத்தக்கது. 


அந்த வழக்குகள் அனைத்தையும் நேர்மையாக எதிர்கொண்ட அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலில் இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டார். அது திமுக செய்த ஊழல் விவகாரங்கள் குளறுபடிகள் என அனைத்து வகைகளில் சொத்து சேர்த்த விவரங்களை தெரிவித்திருந்தார். இதற்கிடையில் நிதியமைச்சர் ஆக பொறுப்பு வகுத்திருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். 


இந்த ஆடியோவில் தமிழக முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினும் மருமகன் சபரீசனும் முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சொத்தை சேர்த்ததாகவும் அந்த சொத்துக்களை எப்படி பாதுகாப்பது என்பது தெரியவில்லை இதுவே எனக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது என தியாகராஜன் புலம்பிய விவரங்கள் அந்த ஆடியோவை இடம் பெற்றிருந்தது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிடிஆரிடம் கேட்டபொழுது அந்த ஆடியோவில் இருப்பது என்னுடைய குரல் அல்லா என்றும் எடிட்டிங், மாஃபிங் செய்யப்பட்டுள்ளதாக இருக்கும் என்று பி டி ஆர் தெரிவித்தார். 


இதனை அடுத்து முதல்வரையும் சந்தித்து இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய பிறகும் திமுக அமைச்சரவையில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது அந்த மாற்றத்தில் நிதி அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மாற்றியது திமுக அரசு, மேலும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பெருமளவில் கட்சியை நடவடிக்கைகளிலும் விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் தணித்து விட்டது திமுக! இந்த விவகாரத்தால் திமுகவின் மற்ற அமைச்சர்களும் பிடிஆரிடம் பேசாமல் மௌனம் சாதித்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. 


இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு திமுகவின் சொத்து பட்டியல் மூன்றாவது பாகத்தை ஆடியோ வடிவில் வெளியிட்டிருந்தார். அதில் திமுக எம்பி டி ஆர் பாலு மற்றும் தமிழக உளவுத்துறை முன்னாள் தலைவர் ஜாபர் சேட் இடையில் நடந்த தொலைபேசி உரையாடலை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், திமுக எம் பி யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ ராசா மற்றும் உளவுத்துறை முன்னாள் தலைவர் ஜாபர் சேட் ஆக இருவருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. இதில் இருவரும் இடையே பேசுவது தெளிவாக கேட்காவிட்டாலும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது குறித்து விளக்கங்கள் அந்த வீடியோவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்த ஆடியோ குறித்து, 2ஜி விசாரணையின் போது சிபிஐ விசாரணையை திமுக எப்படி கையாண்டது என்பது பற்றிய எங்கள் அம்பலத்தின் தொடர்ச்சி....இரண்டாவது டேப்: திமுக எம்பி மற்றும் முன்னாள் அமைச்சருக்கு இடையேயான உரையாடல். திரு ஏ ராஜா (2ஜி வழக்கில் முக்கிய குற்றவாளி) & எம்எஸ் ஜாபர் சைட், தமிழக மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர்! சாட்சிகள் தயாரானார்கள், மூலைப்படுத்தப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர்: UPA அரசாங்கம் 2G விசாரணையை இப்படித்தான் நடத்தியது. இத்துடன் முடிவதில்லை...என்று பதிவிட்டுள்ளார். இது இணையங்களில் வைரலாகி வருகிறது.

Similar News