2024ல் மோடியை வீழ்த்த முடியாது - முதல்வர் ஸ்டாலின் தூக்கத்தை கெடுத்த ரகசிய அறிக்கை!
தேசிய அரசியல் ஆசையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆசையில் 2024 தேர்தல் பற்றிய உளவுத்துறை அறிக்கை காரணமாக தூக்கமின்றி தவிக்கிறார் முதலவர் என தகவல் கிடைத்துள்ளது.
கடந்த மார்ச் 1ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் அன்று சென்னையில் பிறந்தநாள் கூட்டத்தை அரசியல் நிகழ்ச்சியாக மாற்றியது திமுக தரப்பு, அந்த நிகழ்ச்சியில் பேசிய காஷ்மீர் முன்னாள் முதல் பாரூக் அப்துல்லா, 'ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும்' என அழைப்பு விடுத்தார், மறுநாள் அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், 'நான் ஏற்கனவே தேசிய அரசியலில்தான் இருக்கிறேன், யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்பதே எங்களின் கொள்கை' என கூறினார். குறிப்பாக அடுத்து சில தினங்களில் திமுகவில் அதிகமாக ஆக்டிவாக இயங்கக்கூடிய அமைச்சர் செந்தில் பாலாஜி, 'வரும் தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கக்கூடிய சக்தி முதல்வரின் ஸ்டாலினுக்கு தான் இருக்கிறது, ஏன் அவரே கூட பிரதமராக வரமுடியும்' என்பது போன்று பேசினார்.
இப்படி திமுகவிற்கு தேசிய அரசியல் ஆசை வந்துள்ள காரணத்தினால் தற்பொழுது தேசிய அளவில் உள்ள மாநில கட்சிகள் குறிப்பாக ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், மம்தா ஆகியோரை காங்கிரஸ் கூட்டணியில் இருக்க திமுக தரப்பு தற்போதைய வேலையை துவங்கி விட்டது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இவர்களை ஒருங்கிணைத்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என திமுக தரப்பு தற்போது கணக்கு போட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த கட்சிகளை இணைப்பதன் மூலம் கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பிரதமர் வேட்பாளரை நம்மால் முடிவு செய்யவும் முடியும் மேலும் பிரதமர் வேட்பாளர்கள் கூட நம்மை கேட்டு தான் அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தரப்பு கணக்கு போட்டு வருகிறது.
அப்படி ஏற்பட்டால் தேசிய அளவில் நாம் நினைக்கும் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார் என அறிவாலய தரப்பு இப்பொழுதே கணக்கு போட்டு வருகிறது, இதன் காரணமாகத்தான் மாநில கட்சிகளாகிய மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், நவீன் பட்நாயக், தேஜாஸ்ரீ யாதவ் ஆகியோரை ஓர் அணியில் சேர்க்கவேண்டும் என திமுக திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பீகார், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய ஏழு மாநிலங்களில் 273 எம்பி தொகுதிகள் உள்ளன, மகாராஷ்டிரா, பீகாரில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி உருவாகியுள்ளதை பயன்படுத்திக் கொண்டால் அது பிரதமர் மோடியை எதிர்ப்பதற்கு உபயோகமாக இருக்கும் எனவும் ஒரு கணக்காக முதல்வர் ஸ்டாலின் தரப்பு கணக்கு போடுகிறது.