2024 ஆம் ஆண்டு தேர்தலை தட்டித் தூக்கப்போகும் பா.ஜ.க... டெல்லியில் இருந்து வந்து முக்கிய தகவல்...

Update: 2023-07-01 06:00 GMT

2024 ஆம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சி தான் வரவேண்டும், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்று பாஜக தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதற்காக தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், டெல்லியில் இருந்து முக்கிய வியூகங்களை பாஜக தரப்பில் இருந்து வகுக்கப்பட்டு இருக்கிறது.


பாஜக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வெற்ற பெற தீவிரம் காட்டி வருகிறது. 2024 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார் என அமித் ஷா சூளுரைத்துள்ளார். ஏனெனில் மக்கள் பலருடைய வாக்குகளும் பாஜகவிற்கு சாதகமாக தான் தற்போது வரை இருந்து வருகிறது.

அதேசமயம், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. வலுவான பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்திய பாட்னா கூட்டத்தில் பாஜகவை வீழ்த்த ஒத்துழைப்புடன் செயல்படுவது என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது. ஆனாலும் அது படுதோல்வியில் தான் முடிவடைந்து இருக்கிறது. சமீபத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடிய கூட்டத்தின் போது பல்வேறு தரப்பினர் தங்களுடைய வாதங்களை முன்வைத்ததன் காரணமாக சிறிது சலசலப்பு ஏற்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.

எதிர்க்கட்சிகள் ஒன்று கூடினாலும் ஒரே தலைமையில் கீழ் வருவது என்பது சற்று கடினமான விஷயம் தான். நீங்கள் எப்படி கூடி ஒன்று சேர்ந்தாலும் இறுதியில் பாஜக தான் வெல்லப் போகிறது என்று ஒரே நிலையில் தீவிரமாக பாஜக தரப்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வியூகத்தை பாஜக இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பொதுத்தேர்தலை எதிர்கொள்வது, மக்களிடம் எப்படி நம்முடைய திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறுவது? வாக்குறுதிகள் உள்ளிட்டவை குறித்தான் தெளிவான இறுதி வரைபடத்தை அக்கட்சி தயாரித்துள்ளதாக தெரிகிறது. அதன்படி, ஒரு விரிவான மைக்ரோ மேலாண்மை அடிப்படையிலான உத்தியை பாஜக இறுதி செய்துள்ளதாக டெல்லியில் இருந்து தற்போது மிக முக்கியமான தகவல் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக, பாஜக உயர்மட்ட தலைவர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைவர்களுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அடுத்தடுத்த ஆலோசனை கூட்டங்களை விரைவாக நடத்தவுள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அமித் ஷா, ஜே.பி. நட்டா மற்றும் பிற முக்கிய உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் சிந்தனைக் குழு, 543 மக்களவைத் தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் நாட்டை தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு என மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளது. தெற்கு பிராந்தியத்தின் கீழ், அனைத்து 129 மக்களவைத் தொகுதிகளும் அடக்கிய மைக்ரோ மேலாண்மை அடிப்படையில் பூத்கள் மூலம் உள்ளடக்கப்படும்.

மேலும் முக்கியமான இலக்குகள் வைத்தும் செயல்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தியா 7 சதவீதத்தில் மிக வேகமாக வளர்ந்து பெரிய பொருளாதாரமாக இருக்கிறது, அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை 2-4 சதவீதமாக உள்ளது.

அதேபோல கொரோனா தொற்று நோய்களின் போது 100 கோடி மக்களுக்கு இலவச தடுப்பூசிகளையும், 80 கோடி குடிமக்களுக்கு 35 மாத இலவச ரேஷன்களையும், இப்படி பல்வேறு நல்ல திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து இருக்கிறது பாஜக அரசு. இவற்றை முன்னிறுத்தி மக்களிடம் தங்கள் அணுக இருப்பதாகவும் பாஜக டெல்லி தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன!

Tags:    

Similar News