சட்ட விரோத மதமாற்றங்களுக்கு 27.32 கோடி- 'அடோரர்ஸ் காங்கிரிகேஷன்' அமைப்பு மீது LRO புகார்! @Legallro

Update: 2021-04-02 01:00 GMT

இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), பெங்களூருவை சேர்ந்த  'அடோரர்ஸ் காங்கிரிகேஷன்' (Adorers Congregation ) என்ற அமைப்பு, ஜெர்மனியை சேர்ந்த மிஸ்ஸியோ (Missio), ஸ்பெயினை சேர்ந்த மானோ யூனிதாஸ் (Manos Unidas), கேம்பஸ் க்ருசேட் பார் கிறிஸ்ட் (Campus Crusade for Christ) உள்ளிட்ட வெளிநாட்டு எவாஞ்சலிஸ்ட் அமைப்புகளிடமிருந்து 27.32 கோடி ரூபாயை சட்ட விரோத மதமாற்றங்களுக்காக பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.


இது குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு எழுதி உள்ளதாகவும், இதன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று LRO வலியுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News