தேச விரோத நடவடிக்கைகளுக்கு 31.22 கோடி நன்கொடை? - பந்தன்- கொன்னகர் அமைப்பு மீது LRO புகார்! @Legallro
FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), பந்தன் கொன்னகர் என்ற ஏழைகளுக்கு உதவும் அமைப்பு என சொல்லிக்கொள்ளும் தன்னார்வ தொண்டு நிறுவனம், போர்ட் பௌண்ட்டேஷன் என்ற அமைப்பிடமிருந்து 31.22 கோடி ரூபாயை நன்கொடையாக தேச விரோத நடவடிக்கைகளுக்கு பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
போர்ட் பௌண்ட்டேஷன் இயக்குனர் சந்திர சேகர் கோஷ், பந்தன் வங்கி லிமிடெட்டின் CEO ஆவார். இந்த வங்கி மீது RBI நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. பந்தன் கொன்னகர் என்ற இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆராய்ச்சி ஆய்வகங்களை நடத்துகிறது. இந்த ஆய்வகம் ஜாதவ்பூர் பல்கலைக்கழக துணை வேந்தர் சுரஞ்சன் தாஸ் போன்றோரோடு கூட்டு வைத்துக் கொள்கிறது.
இந்த சுரஞ்சன் தாஸ், தேசவிரோத, நக்ஸலைட் ஆதரவு மாணவர்களை கலவரம் செய்ய தூண்டியதாக ஏற்கனவே கெட்ட பெயரோடு வலம் வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை நடத்தி, லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் என LRO கோரிக்கை விடுத்துள்ளது.