மதமாற்ற நடவடிக்கைகளுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை! சிக்குகிறதா 'Sisters of Destitute' என்ற கிறிஸ்துவ அமைப்பு?
இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.
FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), காஜியாபாத்தை சேர்ந்த Sisters of Destitute என்ற தன்னார்வ அமைப்பு, சட்டவிரோத மதமாற்றத்திற்கு பெயர் போன சர்வதேச அமைப்புகளான Manos Unidas Spain, Conrad N. Hilton Fund for Sisters USA, Marist Mission Centre Australia, Raskob Foundation USA போன்ற எவாஞ்சலிச அமைப்புகளிடமிருந்து 33 லட்ச ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை கோரி உள்துறை அமைச்சகத்திற்கு LRO கடிதம் எழுதியுள்ளது. உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.