சட்டவிரோத மதமாற்றங்களுக்கு 3.5 கோடி? 'ஹிமாலயன் பாப்டிஸ்ட் மினிஸ்ட்ரி' மீது LRO புகார்!
இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.
FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), மேற்கு வங்காளத்தை சேர்ந்த 'ஹிமாலயன் பாப்டிஸ் மினிஸ்ட்ரி' (Himalayan Baptist Ministry) என்ற சர்ச் அமைப்பு, அமெரிக்காவை சேர்ந்த வேர்ல்ட் ஹெல்ப் போன்ற மதமாற்ற மாபியாக்களிடமிருந்து 3.5 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த அமைப்பு கிறிஸ்தவரல்லாத குழந்தைகளை இலக்கு வைத்து மதம் மாற்றுவதற்கு பெயர் போனவர்கள். இவை இந்திய அரசியலமைப்பு பிரிவு 25 (1) ஐ மீறும் செயலாகும்.
இது குறித்து LRO மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு விசாரணை கோரி கடிதம் எழுதியுள்ளனர். உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.