சட்ட விரோத மதமாற்றங்களுக்கு 4.34 கோடி- 'சொசைட்டி ஆப் தி மிஷன் சிஸ்டர்ஸ் ஆப் அஜ்மீர்' அமைப்பு மீது LRO புகார்!
இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.
FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), ராஜஸ்தானை சேர்ந்த 'சொசைட்டி ஆப் தி மிஷன் சிஸ்டர்ஸ் ஆப் தி அஜ்மீர்' (Society of the Mission Sisters of Ajmer) என்ற அமைப்பு வெளிநாட்டு நிதியாக ருபாய் 4.34 கோடியை பெற்று அதை சட்டவிரோதமான மதமாற்று வேலைகளுக்காக பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
2018-19 fcra returns (Lists Misereor as ninth donor)
https://fcraonline.nic.in/Fc_retFrm_PDF_Amend.aspx?fileno=125410003R&Final_St=1&c=h
குறிப்பாக அதன் இலக்கு, தண்டனை பெற்ற சிறைவாசிகள், நோயாளிகள், மற்றும் கிறிஸ்தவர் அல்லாதோர் ஆவர். இதில் மற்றொரு குறிப்பிடத்தகுந்த விஷயம், இவர்களுக்கு வெளிநாட்டு நிதி வழங்கிய Misereor என்ற ஜெர்மனியை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பு, டெல்லி வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பவர்களுக்கு நிதி திரட்டிய HRLN என்ற வழக்கறிஞர் அமைப்புக்கு ஏற்கனவே நிதி வழங்கியர்கள் ஆவர். இது குறித்து LRO ஏற்கனவே கடந்த செப்டம்பரில் தகவல்கள் வெளியிட்டுள்ளது.