சட்டவிரோத மதமாற்றங்களுக்கு 4.84 கோடி? - 'கல்கத்தா சமரிட்டன்ஸ்' அமைப்பு மீது LRO புகார்!
இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.
FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), தி கல்கத்தா சமரிட்டன்ஸ் என்ற தொண்டு நிறுவனம், அமெரிக்காவிலுள்ள ஓக் பௌண்டேஷன் மற்றும் கனடாவை சேர்ந்த "கனடியன் யூனியன் ஆப் பப்லிக் எம்பிளாயிஸ்" (CUPE) என்ற அமைப்பிடமிருந்தும் 4.84 கோடி ருபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கலவரங்களை தூண்ட ஆதரவு அளித்ததற்கு பெயர் போனதாகும்.
1971இல் விஜயன் மற்றும் பிரமிளா பாவமணி என்ற தம்பதியினரால், 'கல்கத்தா சமாரிட்டன்ஸ்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதே தம்பதியினர் 1978இல் 'அருணோதய் மிட்வே ஹோம்'என்ற அமைப்பையும், 'கல்கத்தா இம்மானுவேல் ஸ்கூல்' என்ற ஒன்றையும் திறந்தனர். 1985ல் 'இமானுவேல் மினிஸ்ட்ரீஸ் கல்கத்தா' (EMC) என்ற அமைப்பை மேற்கண்ட அமைப்புகளின் மொத்த வடிவமாக உருவாக்கினார்கள்.
இமானுவேல் மினிஸ்ட்ரீஸ் கல்கத்தா மேற்கண்ட அமைப்புகளோடு நெருக்கமாக செயல்படுகிறது. இந்த இமானுவேல் மினிஸ்ட்ரீஸ் கல்கத்தா, "Emmanuel Ministries Calcutta: An Indian Urban Mission Response to the City" என்ற பீனா நாதனின் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பிரபல கிறிஸ்தவ பாதிரியாரான ரோஜர் ஹெட்லேன்ட்டின் "THE WITNESS OF NEW CHRISTIAN MOVEMENTS IN INDIA" கட்டுரையிலும் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்னரே LRO புகார் அளித்துள்ள மற்றோடு சுவிசேஷ அமைப்பான "ஆவாஸ்- தி வாய்ஸ் ஆப் தி வாய்ஸ்லெஸ்" என்ற அமைப்பின் முக்கியமான செயற்பாட்டாளர், கல்கத்தா சமரிடன்ஸ் நடத்திய மற்றொரு ஆய்வில் பங்கேற்றனர்.