சட்டவிரோத மதமாற்றங்களுக்கு ₹5.14 கோடி - ஒடிசா சேவியர் கல்வி நிறுவனங்கள் மீது புகார்!

Update: 2021-07-04 12:00 GMT

இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), ஒடிஷாவில் அமைந்துள்ள Xavier Inst. of Dev. & Studies என்ற கல்வி  அமைப்பு, சட்ட விரோத மதமாற்றங்களுக்கு பெயர் போன Caritas Internationalis, Manos Unidas மற்றும் பல சர்வதேச அமைப்புகளிடமிருந்து 5.14 கோடி ரூபாயை நாகொடையாக பெற்றுள்ளதை வெளிச்சத்திற்கு கொண்டுள்ளது.

இவ்வமைப்புகள் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி மக்களை சட்டவிரோதமாக மதம் மாற்றுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி விசாரணை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News