60 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாட்டில் தமிழ் மொழியின், தமிழரின் நிலைமையை பாருங்கள்!

Update: 2024-06-09 16:26 GMT

உலகில் பல மொழிகள் பேசப்படுகிறது. குறிப்பாக நம் இந்தியாவில் பல மொழிகளை பேசக்கூடிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவற்றிற்கெல்லாம் மிகவும் பழமையான தொன்மையான மொழியாக பார்க்கப்படுவது தமிழ் மொழியே! பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இன்றுவரை ஒரு பழமையான மொழி நிலைத்து நிற்கிறது என்றால் அது தமிழ் மொழி என பிரதமர் நரேந்திர மோடியும் அவ்வப்போது தனது மேடைகளில் கூறி வருகிறார். மேலும் நடந்து முடிந்த தேர்தலின் பிரச்சாரங்களின் பொழுது தமிழகத்திற்கு வருகை புரிந்த பிரதமர் தனது பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பு தமிழில் பேசியே தனது பேச்சை ஆரம்பித்தார். மேலும் தாய் மொழியாக தமிழ் மொழி இல்லை என்று வருத்தத்தையும், விரைவில் அதனை கற்று உங்களுடன் பேசுவேன் என்பதையும் கூறினார். இது மட்டுமின்றி காசியில் தமிழ் சங்கத்தையும் நிறுவி தமிழுக்கு மற்றுமொரு பெருமையும் சேர்த்துள்ளார். இதைத்தவிர உலகம் முழுவதும் திருக்குறளை பரப்பும் நடவடிக்கைகளிலும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் முக்கிய இடத்தை திருக்குறள் பெற்று இருக்கிறது. 

பெருமை அடித்துக் கொள்ளும் திமுக:

ஆனால் இவை அனைத்தையும் விமர்சிக்கும் கருத்துக்களை மட்டுமே முன் வைத்துக்கொண்டு, நாங்கள் இல்லை என்றால் தமிழும் இருக்காது! தமிழகமும் இருக்காது! என திமுகவினர் பேசி வருகின்றனர். அதாவது தமிழ் மொழி செம்மொழியாக கலைஞர் ஆட்சியில் அறிவிக்கப்பட்டதால் தமிழை வளர்த்ததே நாங்கள் தான் என பெருமை அடித்துக் கொள்கிறது திமுக. மேலும் மாநில பள்ளி பாட தமிழ் புத்தகங்களில் திராவிடம் குறித்த தகவல்கள் அதிகமாக இடம்பெற்றிருக்கிறது. இது சரியானது அல்ல என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக தனது குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். 

அதுமட்டுமின்றி, கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடந்த பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, அண்ணாதுரை எழுதிய நூல்கள், பழம் பொருந்திய நூல்கள், வரலாற்று அரசியல் நூல்கள் போன்றவற்றை படிக்கப் பழகுங்கள். திமுக இல்லை என்றால் தமிழகம் இருக்காது, தமிழ் இருக்காது என பலவாறு பேசியிருந்தார். இப்படி உண்மையில் திமுக தமிழை வளர்ப்பதற்காக உழைக்கிறது என்றால், தமிழகத்தில் தமிழ் மொழியின் உயிரெழுத்து கூட தெரியாத பலர் இருக்கக் கூடாது அல்லவா!! ஆனால் தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு தமிழ் எழுத படிக்க தெரியவில்லை!

எழுத்தறிவு பெறாமல் உள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்பு:

கடந்த கல்வி ஆண்டில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில், எழுத்தறிவு பெறாமல் உள்ளவர்கள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தமிழ் உயிர் எழுத்துக்களின் முதல் இரண்டெழுத்துக்களான அ மற்றும் ஆ என்ற எழுத்துக்களை கூட எழுத படிக்கத் தெரியாத நிலையில், 5 லட்சம் பேர் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் 11,869 பேர் தமிழ் எழுத்துக்கள் தெரியாமல் உள்ளனர். அதோடு மொத்த தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 191 பேர் தமிழ் தெரியாமல் உள்ளனர். அவர்களின் 29,176 பேர் பெண்கள் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 

டாப் 10 மாவட்டங்கள்:

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, தமிழ் மொழி எழுத படிக்க தெரியாதவர்கள் அதிகம் உள்ள முதல் 10 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் முதலிடத்தில் கிருஷ்ணகிரியும், இரண்டாம் இடத்தில் மதுரையும் உள்ளது. 


இவர்களில் 18 வயது பூர்த்தியான இளைஞர் மற்றும் இளம் பெண்களும் உள்ளனர் என கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவித்துள்ளது. அதோடு இன்னும் இரண்டு ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களையும், முழுமையான எழுத்தறிவு பெற்ற மாவட்டங்களாக மாற்றுவதற்கு விரைவில் சிறப்பு திட்டம் மேற்கொள்ளப்படும் என முறைசாரா கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Tags:    

Similar News