8 குவாரிகளை எதிர்த்து போராடிய மக்கள் - ஒரு வாரத்திற்கு பின்னர் வீடுகளுக்கு வீடுகளுக்கு சென்றனர்! பின்னணி என்ன?

8 நாட்களுக்குப் பிறகு குவாரியை மூட சொல்லி போராட்டிய மக்கள் தற்பொழுது போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

Update: 2022-11-19 05:24 GMT

8 நாட்களுக்குப் பிறகு குவாரியை மூட சொல்லி போராட்டிய மக்கள் தற்பொழுது போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த கொரட்டரகிரி கிராமத்தில் 120க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்புகளுக்கு அருகில் 8 கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த நிலையில் குவாரிகள் நடத்துவோர் அரசு உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு இரவு நேரங்களில் வெடி வைக்கின்றனர், மேலும் கிராமத்தின் வழியாக தினமும் 1200க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது என மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் ஓராண்டாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

புகார் தெரிவித்தும் பலன் இல்லாத காரணத்தினால் 8 கல் குவாரிகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 11ஆம் தேதி ஒட்டுமொத்த கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புறம்போக்கு நிலத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது கொரட்டரகிரி மக்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மக்கள் இந்த பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பாதா தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் பானு ரெட்டி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 2 குவாரிகள் மட்டும் செயல்படும், லாரிகள் மாற்று பாதையில் இயக்கப்படும் இனி பாதிப்பு இருக்காது என மக்களிடம் உறுதி அளித்த அவரின் வாக்குறுதியை நம்பி போராட்டத்தை கைவிட்டு மக்கள் எட்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் கிராமங்களுக்கு சென்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறும் பொழுது, 'இது தற்காலிக வெற்றிதான், இனி தொல்லை இருக்காது என நம்புகிறோம் மீண்டும் குவாரிகள் பழையபடி இயங்கினால் உறுதியாக பெரும் அளவில் போராட்டம் நடத்துவோம் இனி அதிகாரிகளின் கையில் தான் உள்ளது' என்றனர்.


Source - Junior Vikatan

Similar News