மதமாற்றத்திற்கு 80 கோடி? கிறிஸ்டியன் மெடிக்கல் அசோசியேஷன் ஆப் இந்தியா மீது புகார்!
இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.
FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), இந்தியாவின் கிறிஸ்டியன் மெடிக்கல் அசோசியேஷன் (CMAI) 'மருத்துவ அறிவியலை' தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக மதமாற்றத்தை பரப்ப 83.95 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
சமூக சேவை என்ற பெயரில் இவை நடந்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ஜெயலால் இதன் ட்ரஸ்டீ ஆவார். CMAI வெளிப்படையாகவே சர்ச் மூடநம்பிக்கைகளை பரப்பிய போதும் இவட் அமைதியாகவே இருந்தார். இந்த அமைப்பின் அதிகாரபூர்வமான ஃபேஸ்புக் பக்கம், இந்த அமைப்பின் தலைவரான டாக்டர் ஜானரோஸ் ஆஸ்டின் ஜெயலால் மற்றும் பலரை முன்னணி படுத்துகிறது. இவர்கள் அனைவரும் தங்களுடைய மதமாற்ற நடவடிக்கைகளையும் நோக்கங்களையும் பற்றி மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பாக நடந்த தேசிய மாநாட்டில் அருள் அங்கெட்டல் கூறுகையில், "நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீட்டெடுப்போம். நாம் பலவித சாதனைகள் செய்து வெற்றிகளை கொண்டு வருவோம். நாம் அனைவரும் இணைந்து ஒருமனதாக சுகாதார அமைப்பின் கடவுளாக இயேசு கிறிஸ்துவை ஆக்குவோம் என்று தெரிவித்திருந்தார்.
படுக்கையில் இருக்கும் நோயாளிக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை காட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பு மேலும் மருத்துவ அறிவியலை பயன்படுத்தி மதமாற்றங்கள் செய்வதற்கு பயிற்சிகளையும் நடத்துகிறது. அவர்கள் மத சுதந்திரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதாவது கிறிஸ்தவ மதமாற்றம்.
தற்பொழுது புதிதாக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து வகுப்புகளையும் இந்த அமைப்பு நடத்துகிறது. இந்த அமைப்பின் நோக்கம் மத மாற்றம், அதற்கு பாதுகாப்பு அளிப்பது, இளம் தன்னார்வலர்களும் உதவியாளர்களையும் ஒன்றிணைத்து ஆன்மீக பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது எப்படி என்பதெல்லாம் சொல்லிக் கொடுப்பதற்கு ஆன்லைன் டிரெயினிங் நடத்தப்படுகிறது.