கடந்த வாரத்தில் நடந்த இந்து மத வெறுப்புக் குற்றங்கள் - ஒரு தொகுப்பு.!

கடந்த வாரத்தில் நடந்த இந்து மத வெறுப்புக் குற்றங்கள் - ஒரு தொகுப்பு.!

Update: 2020-11-18 07:35 GMT

இந்துக்கள் மற்றும் இந்து மதத்தின் மீதான தாக்குதல்கள் இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் தொடர்ச்சியாக சில நூற்றாண்டுகளாகவே நடந்து வருகிறது. பல்லாண்டுகளாக இந்த தாக்குதல்களுக்கு தாக்குதல்களின் அளவும், வீரியமும் உலகத்தால் புறக்கணிக்கப்பட்டு வந்தது. கொலைகள், பாலியல் வன்முறை, கட்டாய மதமாற்றம், நில அபகரிப்பு, பண்டிகைகளின் மீதான தாக்குதல், கோவில்களை சூறையாடுதல் மற்றும் கடவுள் சிலைகளை இழிவுபடுத்துதல், வெறுப்பு பேச்சு, சட்டரீதியான பாகுபாடு, இந்துக்கள் மீது எப்போதும் இல்லாத வகையில்  வெறுப்புடன் நடக்கும் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் இது போன்று இந்துக்கள் மீது நடந்த, வெளி உலகத்திற்கு தெரிய வந்த தாக்குதல்களின் தொகுப்பினை இங்கு வழங்குகிறோம்.

1.சூரியனை வணங்குவதற்கான நீண்டகால பாரம்பரியத்தில் ஒன்றான சாத் பூஜை, கொரனா தொற்று நோய் பரவலின் போது சமூக விலகலை பராமரிப்பதற்கு என்று கூறி கல்கத்தா உயர் நீதிமன்றத்தால் கடுமையாக தடை செய்யப்பட்டது. அரசியல் கூட்டங்கள் மற்றும் முகரம் ஊர்வலங்கள் தடைகளின்றி அனுமதிக்கப்பட்ட பொழுது இது மட்டும் தடை செய்யப்படுவது ஹிந்து மரபுகள் மீதான நேரடி தாக்குதலை தவிர வேறு என்ன?

2. தொழிலதிபர் வினய் குப்தா மற்றும் அவரது மனைவி நேஹா ஆகியோர் கார்வாசத் தினத்தன்று தங்கள் ஊழியர் அமன் ஹியத் கானால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

3.தீபாவளி வரை மண் விளக்குகள் மற்றும் சுவரொட்டிகளை விற்க ஒரு தற்காலிக ஸ்டாலை அமைந்திருந்ததால், ஹிந்து சாலையோர விளக்கு விற்பனையாளர் ராகேஷ் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர்  ஹாஜி ஷாஜத், குலாம் ரசூல் மற்றும் அவர்களது நண்பர்களால் தாக்கப்பட்டனர். ரசூலும் மற்றவர்களும் ராகேஷின் பொருட்களைக் கூட சாலையில் தூக்கி எறிந்தனர்.

4. ஒரு ஹிந்து சிறுமி உத்திரப்பிரதேசத்தில் ஒரு செங்கல் சூளையில் ஆறு மாதங்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாஹிப் என்பவனால் அடிமைப்படுத்தப்பட்டார். டேராடூன் நெடுஞ்சாலையில் டெல்லிக்கு தப்பிச் செல்ல முயன்ற பொழுது சாகிப் பொலிஸாரிடம் பிடிபட்டான்.

5. பல மாநிலங்கள் பட்டாசு விற்பனையை தடை செய்ததன் மூலம் தீபாவளி கொண்டாட்டங்கள் மற்றும் பெரும்பான்மையான ஹிந்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கச் செய்தனர். அதேவேளையில் பட்டாசுகளை பயன்படுத்துபவர்கள், விற்பதில் ஈடுபட்டவர்களை  பயங்கரவாதிகளைப் போல காவல்துறையினர் நடத்தினர். ஒட்டுமொத்த மாநில அரசாங்கமும் கொஞ்சமும் இரக்கமின்றி, சாலையோர பட்டாசு விற்பனையாளர்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டதாக ஏராளமான தகவல்கள் வந்தன.

6. சீனா வைரஸின் தொற்று நிலைமையை சமாளிக்க என்று கூறி ராஜஸ்தான் அரசு இந்த ஆண்டு ஆட்சியில் நடந்த புஷ்கர் கண்காட்சியை தடை செய்தது. ரம்ஜான் திருவிழாக்கள், முகரம் ஊர்வலங்கள் ஆகியவை செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது, இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் பேரணிகள் அனுமதிக்கப்பட்ட பொழுது இது மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது.

7. லுக்மான் தனது சகோதரர்களான அர்மான், நோர்மன் மற்றும் நண்பர் சம்ஷத் ஆகியோருடன் சேர்ந்து தன்னுடன் வசித்து வந்த ஹிந்துப் பெண் நேகா படலை கொலை செய்தார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.அந்தப் பெண் இருவருடைய உறவை முடித்துக் கொள்ள விரும்பியதால் இந்த படுகொலை நடத்தப்பட்டது. லுக்குமான் தலைமறைவாக இருக்கிறார். மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர்.

8. ஒரு ஹிந்து தலித் சிறுமி தனது இளம் சகோதரருக்கு முன்னால் ஒரு முஸ்லிம் வழக்கறிஞர் ஹர்சத் கானால் கொடூரமாக தாக்கப்பட்டார். கான் தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்ட பொழுது அதை மறுத்தார். இந்த மாத இறுதியில் அந்த சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

9. பூஜை, தீபாவளி பட்டாசுகள் மற்றும் தற்காலிக விளக்குகள் மீதான தடை போதாது என்பது போல பூரி நிர்வாகம் இந்த ஆண்டு தீபாவளியின்போது ஸ்ரீ ஜெகநாதர் கோவிலில் உள்ள கவுன்ரிய காதி சடங்கிற்கு தடை விதித்துள்ளது. இந்த சடங்குகளை தாக்க இந்த அரசாங்கங்களுக்கு கொரானா தொற்றுநோய் எளிதான காரணமாகியுள்ளது.

10. மாசு என்பதை காரணம் காட்டி தேசிய பசுமை தீர்ப்பாயம் முழுக்க முழுக்க ஹிந்து பண்டிகைகளின் மீது தாக்குதலை தொடங்கியது. பல மாநிலங்களில் 30-ஆம் தேதி நவம்பர் வரை பட்டாசுகளை தடை செய்ய வைத்தது மட்டுமல்லாமல், விளக்குகள் செய்யும் ஏழை தொழிலாளர்களை கூட இது தாக்கத் தொடங்கியது. அந்த விளக்கு செய்யும் முறைகள் மாசுக்கான காரணம் என்று கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

11. பங்களாதேசின் பிரம்மன்பாராவில் ஒரு ஹிந்து குடும்பத்தின் வீடு அழிக்கப்பட்டது. மற்றும் இஸ்லாத்தை அவதூறாக பேசியதாக கூறி அவருடைய வீடு கொள்ளையடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட  அவரது குடும்ப உறுப்பினர்கள் தற்போது மீண்டும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். நவம்பர் ஒன்றாம் தேதி, கோர்பண்புர் கிராமத்தில் பல ஹிந்து வீடுகளுக்கு தீ வைத்த பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

12. இரண்டு மாதங்களுக்கு முன்பு சதாம் உசேன் ஆல் கடத்தப்பட்ட 15 வயது இந்து பெண்ணின் தந்தை தனது மகளை திருப்பி அனுப்புமாறு பாகிஸ்தானின் சிந்து மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

13. பாகிஸ்தானில் உள்ள சிந்து மாநிலத்தில் பத்திர தொழிலாளியாக பணியாற்றி வந்த 10 வயது இந்து குழந்தை கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ஆனால் அதன் உரிமையாளர் இஷ்க் பணம் கொடுக்கவோ அல்லது விடுமுறை அளிக்க மறுத்ததால் அவர் சிகிச்சை இல்லாமல் இறந்து விட்டார்.

14. தனது சகோதரி சிம்ரன் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு பாகிஸ்தானில் சிந்துவில் திருமணம் கட்டாய திருமணம் செய்ததை அடுத்து, சகோதரர், பிரதமர் மோடியிடம் உதவி கோரினார்.

15. பங்களாதேஷில் உள்ள ஒரு கோவிலில் துர்க்கை, சரஸ்வதி மற்றும் கார்த்திகேயர் ஆகியோரின் திருவுருவச் சிலைகள் அழிக்கப்பட்டன.

 பெரும்பாலான இந்து மத வெறுப்பு குற்றங்கள் சில மத போதனைகள் மற்றும் அரசியல் சித்தாந்தங்களில் ஹிந்து விரோத மதவெறியால் நடத்தப்படுகின்றன. இஸ்லாமிய நாடுகளில் ஹிந்து விரோத வெறுப்பு வெளிப்படையானது என்றாலும் ஹிந்து போபியா மற்றும் வெறுப்பு குற்றங்களுக்கு சூழலை மதசார்பற்ற நாடுகளும் வழங்குகின்றன. தீபாவளியின் போது பட்டாசுகள் மீதான படிப்படியான தடை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.  இது வெளிப்படையாக மாசு சம்பந்தப்பட்டதாக தோன்றினாலும் இது ஹிந்து பண்டிகைக்கான கட்டுப்பாடு குறித்தது என்பது தெளிவு.

Translated from: The Hindu Post.

Similar News