நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - டி.ஜி.பி'களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

சீன உளவு கப்பலும், பாகிஸ்தான் ட்ரானும் ஆபத்துதான் என டி.ஜி.பி'களுக்கு அமித்ஷா எச்சரித்துள்ளார்.

Update: 2022-08-21 02:38 GMT

சீன உளவு கப்பலும், பாகிஸ்தான் ட்ரானும் ஆபத்துதான் என டி.ஜி.பி'களுக்கு அமித்ஷா எச்சரித்துள்ளார்.

நம் அண்டை நாடுகளான சீனாவின் உளவு கப்பல், பாகிஸ்தானின் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் ஆகியவை நம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவை இந்த சவால்களை அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

கடந்த மாதம் 17, 18 ஆம் தேதிகளில் தில்லியில் மாநில டி.ஜி.பி'களுக்கு தேசிய பாதுகாப்பு மாநாடு நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர். தற்பொழுது அந்த மாநாட்டில் அமித்ஷா பேசிய விவரம் தற்பொழுது தெரியவந்துள்ளது. அவர் பேசியதாவது, 'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014 அமைந்தத்தில் இருந்து நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.



சில அண்டை நாடுகளால் நமக்கு அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது, ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீருக்கு ட்ரோன்கள் அனுப்பி உளவு பார்ப்பது ஆயுதங்கள் அனுப்புவது போன்று பாகிஸ்தானில் இருந்து நடக்கிறது. சீனாவின் உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நம் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தி அமைதி சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. இது நம் நாட்டுக்கு இளைஞர்களுக்கு எதிர்காலத்திற்கு எதிரான போராகும் நாட்டின் பாதுகாப்பு கருவி அனைத்து மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.



நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குற்றங்களை தடுப்பதுடன் அது தொடர்பாக தகவல்களை மாநிலங்களிலும் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என விவாதித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. 


Source - Dinamalar

Similar News