ஆ! அண்ணாமலை வருகிறாரா? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் இருந்து தெறித்து ஓடிய 'தமிழக ஈழ வியாபாரிகள்'

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கருத்தரங்கில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்து கொள்வதே முன்னிட்டு பெயரளவில் ஈழம் தொடர்பாகவும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாகவும் அரசியல் செய்து வரும் சில அமைப்புகளை சார்ந்தவர்கள் தெறித்து ஓடி விலகி உள்ளனர்.

Update: 2022-05-10 11:30 GMT

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கருத்தரங்கில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்து கொள்வதே முன்னிட்டு பெயரளவில் ஈழம் தொடர்பாகவும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாகவும் அரசியல் செய்து வரும் சில அமைப்புகளை சார்ந்தவர்கள் தெறித்து ஓடி விலகி உள்ளனர்.

இலங்கையின் வடகிழக்குப் பகுதியை தமிழீழம் என்ற பெயரில் தனி நாடு அமைக்கக்கோரி ஈழப் போர் நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2009'ம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் ஈழப்போர் முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் முடிவுற்றது. இந்த மே 18 ஆம் நாளை வெற்றி நாளாக அறிவித்து இலங்கை அரசு கொண்டாடி வருகிறது ஆனால் உலகின் ஒட்டுமொத்த தமிழர்களும் மே 18 தினத்தை துக்க நாளாகவே பார்க்கின்றனர். இலங்கையின் வட கிழக்கு கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழம் என்ற பல ஆண்டுகால கோரிக்கை முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட சமயத்தில் அப்பொழுது தமிழகத்தில் தி.மு.க'வும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தன. இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஈழப் போரை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உதவி புரிந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த சூழலில் தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கம் ஒன்று தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது. வரும் மே மாதம் 14'ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பழநெடுமாறன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் தி.மு.க போன்றோர் பங்கேற்பார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


 



 




இதுதவிர பிற இயக்கங்களை சார்ந்தவர்களாக திராவிடர் விடுதலை கழக கொளத்தூர் மணி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இதில் கலந்து கொள்கிறார் என்று அழைப்பிதழில் பெயர் வெளியிடப்பட்ட சில மணி துளிகளில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கொளத்தூர் மணி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் மே 17 இயக்கமும் பங்கேற்காது என திருமுருகன் காந்தியும் அறிவித்துள்ளார். இது மட்டுமல்லாது தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

இவர்கள் அனைவரும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசுகிறார் என்பதை பார்த்த உடனேயே நாங்கள் வரவில்லை எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏனெனில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தற்பொழுது எங்கு பேசினாலும், எந்த விஷயம் பேசினாலும் இந்த தேதியில் இது நடந்தது இதற்கு இவர்கள் தான் காரணம் என்பதை அழகாக, தெளிவாக கூறி பேசி வருகிறார். இந்த நிலையில் தற்போது ஆளும் தி.மு.க அரசு தமிழகத்தில் ஆட்சி செய்த காலத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையை வைத்து அரசியல் செய்து இயக்கங்களை நடத்தி வரும் ஒரு சிலரை பற்றி எங்கே அந்த மேடையில் ஏதேனும் பேசி விடுவாரோ என பயந்து இந்த ஈழ வியாபாரிகள் ஒதுங்கிக் கொண்டதாக தெரிகிறது ஏனெனில் அந்த மேடையில் அண்ணாமலை ஒரு கேள்வி கேட்பதற்கு வாய்ப்பு இருந்து வாய்ப்பு உள்ளது, '2009ஆம் ஆண்டு அப்பொழுது ஆட்சியில் இருந்தது யார்? இதை நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியுமா முடியாதா?' என்ற கேள்வி கேட்டால் தற்போது தி.மு.க'வுடன் ஒட்டி உறவாடும் இவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் போய்விடும். அந்த காரணத்தினாலேயே அனைவரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News