'ஆடாத ஆட்டமெல்லாம்...!' - நிதியமைச்சரை புலம்ப வைத்த தி.மு.க ஸ்டைல் அரசியல், மெதுவாக பற்றிய நெருப்பு!
'எனக்காக ஜால்ரா தட்டு என சொல்ல மாட்டேன்' என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதுதான் தற்போது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'எனக்காக ஜால்ரா தட்டு என சொல்ல மாட்டேன்' என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதுதான் தற்போது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'நான் யார் தெரியுமா? எங்கப்பா யார் தெரியுமா? என் தாத்தா? யார் தெரியுமா? எங்க பரம்பரை பற்றி தெரியுமா?' என தான் இருக்கும் கட்சி குணம் பற்றி தெரியாமல் பேசி வந்த பரம்பரை புகழ் பேசும் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் தி.மு.க தான் ரூபத்தை கட்ட துவங்கிவிட்டது. ஆம் பெருமை பேசும் நித்தியமைச்சரை திட்டமிட்டு காலம் காலமாக தி.மு.க'வில் கோலோச்சும் உடன்பிறப்புகள் ஒதுக்க துவங்கிவிட்டனர். இதுவரை வெளியுலகத்திற்கு வதந்திகளாக உலா வந்த செய்தியை நேற்று தனது வாயாலேயே ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்துவிட்டார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.
தி.மு.க தலைவராக மீண்டும் ஸ்டாலின் பொறுப்பேற்றவை கொண்டாடும் வகையில் அமைச்சரின் விருந்து வைத்து விழா நடத்தினார். இதில் புதிதாக மதுரை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட கோ.தளபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த், எஸ்ஸார் கோபி, மிசா பாண்டியன், அதலை செந்தில்குமார், மாநகராட்சி கவுன்சிலர் சிலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது தான் தற்பொழுது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க'வில் கடந்த சில நாட்களாக வரும் தகவல்கள் எனக்கு வேதனை தருகிறது. சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து மற்றவர்களையும் புறக்கணிக்க கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. நான் ஜால்ரா அடிப்பவன் இல்லை, ஒரு தகவலை முதல்வரிடம் கூறினால் இதயத்தில் இருந்து கூறுவேன். எனக்கு கொள்கையும், தத்துவமும் உண்டு! எது உண்மையான தெரிகிறதோ அதை பின்பற்றுவேன். தந்தை பெரியாரின் கொள்கையை பின்பற்றுகிறேன் யாருடனும் போட்டியிட விரும்பவில்லை தனி பாதையில் சென்று கொண்டிருக்கிறேன்.