உதய்ண்ணா அந்த ஆயிரம் கோடி என்னாச்சுங்கண்ணா? - சமயம் பார்த்து உதயநிதியை கோர்த்துவிட்ட அண்ணாமலை!
டாஸ்மாக் மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. நடந்து வருகிறது. குறிப்பாக இந்த ஒரு ஐ டி ரைடுக்கு காரணமான அண்மையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சொந்த ஊரில் 300 கோடிக்கு புதிய பிரமாண்ட பங்காளவை கட்டி வருவதாக பிரபல விமர்சகர் சவுக்கு சங்கர் குற்றசாட்டு வைத்தார். மேலும், கட்டுமான பணிகள் நடைபெறும் புகைப்படத்தையும் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூரில் உள்ள வீடுகளிலும், மே 26ம் தேதியில் இருந்து 4 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. மேலும் அவருடைய தமிழ்நாட்டில் உள்ள சம்மந்தப்பட்ட இடங்கள் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் குறிப்பாக கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் கூட அமைச்சருக்கு சொந்தமான சொத்துக்களில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். திமுகவின் அமைச்சரின் ஒருவரின் வீட்டில் வருமான வரி துறை சோதனை நடப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் அமைச்சர் உதயநிதியின் அறக்கட்டளைக்கு சொந்தமான, 36.3 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அமலாக்கத் துறையின் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 25-ம் தேதி, 'கல்லால் குரூப்' உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான, 36.3 கோடி ரூபாய் அசையா சொத்துகளும், வங்கி கணக்கில் இருந்த 34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது என்னடா திமுகவுக்கு வந்த புதிய சோதனை என்று திமுகவைச் சேர்ந்த பெரிய தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தற்போது கலகத்தில்தான் இருக்கிறார்கள். சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக புகாரை தொடர்ந்து, 'லைக்கா' சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய எட்டு இடங்களில், இம்மாதம் மே 16ம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியுடன் தொடர்புடைய, 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' மற்றும் லைக்கா நிறுவனங்களுக்கு இடையே கோடிக்கணக்கான ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில்தான் சென்னை வேளச்சேரியில் உள்ள உதயநிதியின் நெருங்கிய நண்பர் வீடு, எழும்பூர் எத்திராஜ் சாலையில் உதயநிதியின் ரசிகர் மன்றம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகி வழக்கறிஞர் பாபுவின் வீடு, அலுவலகத்தில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லல் குரூப்ஸ் மற்றும் உதயநிதி அறக்கட்டளை தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, மே 17-ல் அமலாக்கத் துறை அலுவலகத்தில் பாபு ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்தப் பிரச்சினை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும் இன்னும் பல்வேறு அமைச்சர்களின் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள் என்றும் தகவல்கள் வழியாக இருக்கிறது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் 36 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டு உள்ளதாக கூறியது சமூக வலைத்தளங்களில் தற்போது பேச்சு பொருளாகி பெரும் பரபரப்பை கிளப்புகிறது.