டெல்லியில் அமித்ஷா'வை ஒரு மணி நேரம் சந்தித்த அண்ணாமலை - 'நான் இருக்கேன் இறங்கி விளையாடு' என தட்டி கொடுத்து அனுப்பிய அமித்ஷா
சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலை அமித்ஷாவுடன் ஒரு மணி நேரம் பேசி தமிழக அரசியல் களத்தில் தான் எடுக்க போகும் நடவடிக்கைகளுக்கு
சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலை அமித்ஷாவுடன் ஒரு மணி நேரம் பேசி தமிழக அரசியல் களத்தில் தான் எடுக்க போகும் நடவடிக்கைகளுக்கு க்ரீன் சிக்னல் வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அரசியல் களம் தற்பொழுது மாறி வருகிறது, இதுவரை அதிமுக - திமுக என இருந்த நிலை தற்பொழுது சற்று மாறி திமுக ஆளும் அரசாகவும் அதன் தவறுகளை முதன்மையாக சுட்டிக்காட்டும் அரசாக பாஜக மாறி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி ஈரோடு இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு யார் போட்டியிடுவார்கள் என்ற பரபரப்பு அரசியல் உலகில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 2024 தேர்தலில் குறைந்தபட்சம் 25 எம்பிக்களை தமிழகத்தில் இருந்து அனுப்ப வேண்டும் என்ற ஆணித்தரமான முடிவில் உள்ளார். இந்த பரபரப்பான சூழலில் பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது!
கடந்த வாரம் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது, அக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். டெல்லி சென்ற அண்ணாமலை மத்திய அமைச்சர் அமைச்சராக சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியதாக பாஜக தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் குறிப்பாக தமிழக தற்போதைய அரசியல் கள நிலவரம், அடுத்த கட்டமாக தமிழக பாஜகவை எடுத்துச் செல்வது, தமிழக பாஜகவின் தற்போதைய கட்டமைப்பு குறித்த பல முக்கிய தகவல்களை இதில் பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடுத்துரைத்துள்ளார்.
அந்த ஒரு மணி நேரத்தில் அண்ணாமலை தற்போதைய தமிழக பாஜகவின் நிலை, தற்போதைய தமிழக அரசியல் களத்தில் எடுக்கவேண்டிய முடிவுகள், தமிழக பாஜக அடுத்து எடுத்து வைக்க போகும் அடிகள், யாரெல்லாம் கட்சியில் பொறுப்பு! யாரெல்லாம் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள், கட்சியில் உள்ள கருப்பு ஆடுகள் யார்? மேலும் கூட்டணி கட்சிகளின் நிலவரம் என்ன? தமிழக மக்களின் மன ஓட்டங்கள் என்ன? என ஒரு ரகசிய அறிக்கை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.