ஈரானில் வலுவடையும் ஹிஜாபிற்கு எதிரான போராட்டம் - ஹிஜாப் கட்டாயம் என பிடிவாதம் பிடிக்கும் அரசு
ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானில் 1983 ஆம் ஆண்டிலிருந்து ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டது, பெண்கள் தங்கள் கண்களை தவிர்த்து தலை மற்றும் உடலை மறைக்க கருப்பு மறைப்பு அணிவது கட்டாயமாக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை மொரலிட்டி போலீஸ் எனப்படும் அறநெறி காவல் அதிகாரிகள் பெண்களை கைது செய்வதற்கு முன்பு எச்சரிக்கை வழங்குவது அப்போது வழக்கத்தில் இருந்தது. முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரூஹானியன் ஆட்சிக் காலத்தில் பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் பல வண்ணங்களில் புர்கா அணிவதற்கு எந்த தடையும் இல்லை.
ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அவரது மகனும் ஈரானின் தற்போதைய ஜனாதிபதியுமான இப்ராஹிம் ரைஸி ஈரான் மற்றும் இஸ்லாம் மாதத்தின் எதிரிகள் சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் மத கலாச்சாரத்தை குறி வைக்கிறார்கள் என குற்றம் சாட்டினார். மேலும் அரசு நிறுவனங்களில் பெண்கள் புர்கா அணிந்து வருவதை கட்டாயமாக வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்த எல்லா நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஈரானை சேர்ந்த 22 வயது பெண் புர்கா அணியும் ஆடை கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக அறநெறி காவல் துறையால் கைது செய்யப்பட்டார் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த அவர் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி மரணம் அடைந்தார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை ஈரானிய ஜெனரல் ஒருவர் புர்கா தொடர்பான போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 300 பேர் கொல்லப்பட்டனர் என தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக ஈரானில் போராட்டங்கள் வலுவடைந்து வருகிறது. மக்கள் ஹிஜாப்புக்கு எதிராக குரல் எழுப்பியும் களத்தில் போராடியும் வருகின்றனர்.