தி.மு.க அரசின் அலட்சியத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம் ஐயா? - கதறும் அரசு கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்

'அரசு கேபிள் டிவி முடக்கப்பட்டது தனியார் நிறுவனங்கள் செய்யும் சதியா?' என அரசு கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் கொதித்துள்ளனர்.

Update: 2022-11-24 06:02 GMT

'அரசு கேபிள் டிவி முடக்கப்பட்டது தனியார் நிறுவனங்கள் செய்யும் சதியா?' என அரசு கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் கொதித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு கேபிள் டி.வி நிறுவனம் 2007 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2011 ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரசு கேபிள் டி.வி நிறுவனத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

பின்னர் 2017 மத்திய, மாநில அரசுகள் சார்பில் அரசு டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களில் இலவசமாக வழங்கப்பட்டன. பல்வேறு தனியார் நிறுவனங்களின் செட்டாப் பாக்ஸ்களின் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் கடந்து கேபிள் இணைப்புகளுக்கு செட் ஆப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில் இந்த செட்டாப் பாக்ஸ்களை மாற்றி தராமல் கேபிள் நெட்வொர்க்கில் ஏற்படும் குளறுபடைகளை சரிசெய்யாமல் உள்ள நிலையில் கடந்த ஐந்து நாட்களாக தமிழகம் முழுவதும் அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து கேபிள் ஒளிபரப்பு முடங்கி உள்ளதால் கேபிள் ஆபரேட்டர்கள் தவிக்கின்றனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கேபிள் ஒளிபரப்பில் உள்ள குளறுபடிகளை அகற்றக்கோரி கேபிள் ஆபரேட்டர்கள் ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்தனர். இதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஈரோடு மாவட்ட கேபிள் டி.வி உரிமையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் அருள்முருகன் கூறியதாவது, 'தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களுடன் 24 லட்சம் கேபிள் இணைப்புகள் இயங்கி வருகின்றன. அரசு கேபிள் டிவியின் செட்டாப் பாக்ஸ் பெற்றுள்ள அவர்களுக்கு கடந்த ஐந்து நாட்களாக கேபிள் ஒளிபரப்பு தடைபட்டுள்ளது.

கேட்டால் சர்வரில் கோளாறு இருப்பதால் ஒளிபரப்புதில் சிரமம் எனக் கூறுகிறார்கள் தவிர என்ன பிரச்சனை உள்ளது என அதிகாரிகள் வெளிப்படையாக கூறுவதில்லை. சர்வேரில் பிரச்சனை வந்தால் அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் சரி செய்து விட முடியும் ஆனால் தற்பொழுது அதனை சரி செய்யாமல் இழுத்தடிக்கின்றனர்.

ஏதேதோ காரணங்களை கூறிய ஒளிபரப்பில் உள்ள பிரச்சினையை சரிசெய்யாமல் தாமதப்படுத்துகிறார்கள். மக்கள் கேட்கும் கேள்விக்கு எங்களை போன்ற கேபிள் ஆபரேட்டர்களால் பதில் கூற முடியவில்லை. தினமும் 50 பேருக்கு மேல் எங்களிடமிருந்து கேபிள் இணைப்பை துண்டித்து விட்டு டி.டி.எச் இணைப்புக்கு மாறி வருகின்றனர்.

இது தனியாள் கேபிள் நிறுவனங்கள் செய்யும் சதியா? டி.டி.ஹெச் நிறுவனங்களுக்கு அரசு ஆதரவாக செயல்படுகிறதாக என குழப்பமாக இருக்கிறது.

இந்நிலையில் மக்கள் செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் விடுத்துள்ள அறிவிப்பில் சர்வர் பிரச்சனைக்கு காரணமான ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சர்வர் பிரச்சினையை சரி செய்யாமல் அந்த நபரை கைது செய்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் இலவசமாக பொருந்தி தருவதாக கூறி களமிறங்கியுள்ளது. ஏற்கனவே அந்த நிறுவனத்திடம் ஆறு லட்சம் இணைப்புகள் உள்ளனையில் அவர்கள் அட்வான்ஸ் செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கும் பட்சத்தில் எங்கள் தொழில் பாதாளத்துக்கே போய்விடும் அபயம் உள்ளது. அரசு மூலம் வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ் இருக்கு பதிலாக டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வழங்குமாறு கடந்த மூன்று ஆண்டுகளாக கேட்டு வருகிறோம்.

ஆனால் அரசு இதனை கண்டுகொள்ளவே இல்லை டிஜிட்டல் செட்டாப் பாக்ஸர்களுக்கு கடந்த 27 மாதங்களாக அரசு தரப்பில் இருந்து கேபிள் நிறுவனத்திற்கு சேவை கட்டணம் செலுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் பாதிக்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ் தற்போது சரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது இதில் ஏதோ குளறுபடி இருக்கிறது' என அச்சத்துடன் தெரிவித்தார்.

'தி.மு.க அரசு தனியார் நிறுவனங்களை வளர்த்தெடுக்கிறதா?' என்ற சந்தேகம் ஆப்ரேட்டர்கள் மத்தியில் வலுவாக இருக்கிறது.


Source - Junior Vikatan

Similar News