தங்கள் மதத்தை அவமதித்ததாக மாணிக் ஷா, ஜடன் சாஹா, பிரஷாந்தா தாஸ், பூஜாரி நிமய் கிருஷ்ணா உள்ளிட்ட பத்து இந்துக்களை கொலை செய்துள்ளனர். இஸ்லாமியர்கள் இது வரை 23 இந்துப் பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் 17 இந்துக்களுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.
குமில்லா மாவட்டத்தில் துர்கா பூஜை பந்தலில் தெடங்கிய வன்முறை பின்னர் அதே மாவட்டத்தில் உள்ள நரசிங்க தேவ் கோவில் மற்றும் தஷௌஜ காளி கோவில், ரிஷிபாரா கோவில், ராஜேஸ்வரி காளி கோவில் உள்ளிட்ட 18 கோவில்களிலும் தொடர்ந்தது. அங்கிருந்த கடவுள் சிலைகள் உடைக்கப்பட்டு கோவில்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டமாக பரவிய வன்முறையில் சிட்டகாங் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 20 பூஜைப் பந்தல்கள், 10க்கும் மேற்பட்ட கோவில்கள் தாக்கப்பட்டன.
சந்த்பூர் மாவட்டத்தில் உள்ள 150 இந்துக் குடும்பங்கள், 70 வீடுகள், 7 கோவில்கள் மற்றும் பல பூஜைப் பந்தல்கள் சூறையாடப்பட்டன. இவற்றுள் ராமகிருஷ்ண மடமும் அடங்கும். நவகாளி பிரிவினையின் போது சந்தித்த கொடூரங்களை அன்று மீண்டும் சந்தித்தது. ராம் தாகூர் ஆசிரமத்தை தாக்கிய இஸ்லாமியர்கள், மொங்கோலா, நவதுர்கா, பிஜோயா, திரிசூல் மற்றும் கோட்பாரி பகுதிகளில் இருந்த பூஜைப் பந்தல்கள் அடித்து உடைக்கப்பட்டன. நல்சிரா, சயானிபஜார், பேகம்கஞ்ச், சௌமோஹானி, சோனாய்முர் உள்ளிட்ட பகுதிகளில் 20 வீடுகள் தாக்கப்பட்டு 9 கோவில்களும் சூறையாடப்பட்டன.
அக்டோபர் 15, வெள்ளிக்கிழமை அன்று உச்சத்தை எட்டிய வன்முறையில் வெறி கொண்ட இஸ்லாமியர்கள் நவகாளியில் அமைந்துள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோவிலைத் தாக்கினர். இது குறித்து இஸ்கான் அமைப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பதிவிட்டது. இந்த தாக்குதலில் கிருஷ்ணர் கோவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானதாகவும் வங்கதேச அரசு இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த தாக்குதலில் இஸ்கான் அமைப்பின் நிறுவனர் சுவாமி பிரபுபாதரின் சிலை எரிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஸ்கான் கோவில் எரிக்கப்பட்ட வீடியோக்களும் தாக்குதலில் காயமடைந்த சாதுக்களின் மனக்குமுறலும் அனைவரின் மனதையும் உலுக்கும் வண்ணம் இருந்தன. அதே போன்று ஃபெனி மாவட்டத்திலும் கோவில்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கையில் தடிகளை வைத்துக் கொண்டு வீதியில் வெறியுடன் இந்துக் கோவில்களில் வன்முறையில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
ஃபெனி மாவட்டத்தில் ஜோய்காளி கோவிலில் இருந்து ஊர்வலமாக செல்ல இந்துக்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், வங்கதேச இந்து, புத்த, கிறிஸ்தவ கூட்டமைப்பின் தலைவர் சுக்தேவ் நாத் தப்பன் மீது இந்த வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது. வன்முறையைக் கண்ணால் கண்டவர்களின் கூற்றுப்படி ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மாணவரணி தான் இந்த பாதகச் செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இது குறித்து வங்கதேச காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அதன்பின் அக்டோபர் 17 அன்று புதிதாக நடந்த வன்முறையில் ரங்பூர் பகுதியில் ஒரே கிராமத்தில் 20 இந்துக்களின் வீடுகளுக்கு இஸ்லாமிய வன்முறை கும்பல் தீ வைத்தது; கோவில்களும் கடைகளும் கொளுத்தப்பட்டன. மஜிப்பாரா பகுதியில் இந்து ஒருவர் ஃபேஸ்புக்கில் தங்கள் மதத்தை குறித்து அவதூறாக பதிவிட்டதாக கூறி இஸ்லாமியர்கள் பல இந்துக்களின் வீடுகளைத் தீக்கிரையாக்கினார். பதிவிட்டதாக கூறப்பட்ட அவரின் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அடைந்ததால் அவரது வீடு மட்டும் தப்பித்தது. இந்த வன்முறையில் மஜிப்பாரா, பொட்டோலா, ஹட்டிபந்தா உள்ளிட்ட கிராமங்கள் குறி வைக்கப்பட்டு சூறையாடப்பட்டன.
இந்த வன்முறை குறித்து இரவு ஒன்பது 50 வாக்கில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களால் இரவு முழுவதும் போராடி மறுநாள் அதிகாலை மூன்று மணிக்கு தான் தீயை அணைக்க முடிந்தது. இந்த வன்முறையில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றபோதும் கிட்டத்தட்ட இருபது வீடுகள் கொளுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோக பிற 24 மாவட்டங்களில் நிகழ்ந்த வன்முறையில் பின்வரும் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின.
1)காஷிம்பூர் பகுதியில் 4 பூஜைப் பந்தல்கள்
2)காஜிப்பூரில் 3 கோவில்கள் மற்றும் பந்தல்கள்
3)லக்ஷ்மிபூரில் 7 கோவில்கள் மற்றும் பந்தல்கள்
4)குரிகிராம் பகுதியில் 9 கோவில்கள் மற்றும் பந்தல்களுக்கு தீவைப்பு
5)சகாரியா மற்றும் பெகுவாவில் 7 கோவில் மற்றும் பந்தல்கள்
6)பந்தர்பன் பகுதியில் லாமா ஹரி உள்ளிட்ட 5 கோவில்கள் சூறையாடப்பட்டு நகைகள், பணம் திருட்டு
7)குல்னா மாவட்டத்தில் 18 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன
8)ஜெஸ்ஸூர் மாவட்டத்தில் 5 கோவில்கள் மற்றும் பந்தல்கள் சூறை
9)நவாப்கஞ்சில் 8 கோவில்கள் மற்றும் பந்தல்கள் மீது தாக்குதல்
10)பாரா பஜாரில் 6 கோவில்கள் மற்றும் பந்தல்கள் மீது தாக்குதல் இந்துக்களின் கடைகள் சூறை
11)பரிசல் மாவட்டத்தில் 3 கோவில்கள், பந்தல்கள் மீது தாக்குதல்
12)ராஜ்பாரியில் காளி கோவில் மீது தாக்குதல்
13)திமலா பகுதியில் 3 கோவில்கள் சூறை
14)சுக்தகிராம் பகுதியில் 20 இந்து வீடுகள் மீது தாக்குதல்
15)ஃபரித்பூர் மாவட்டத்தில் 2 கோவில்கள்
16)ஷட்கிரா மாவட்டத்தில் 3 கோவில்கள், பந்தல்கள் மீது தாக்குதல்
17)போக்ரா சதர் பகுதியில் ரக்ஷா காளி மற்றும் சீதளா தேவி அம்மன் கோவில்கள் சூறை
18)கிஷோர்கங்கா மாவட்டத்தில் 3 கோவில்கள் மீது தாக்குதல்
19)நர்சிங்தி மாவட்டத்தில் 1 காளி கோவில் 1 பூஜைப் பந்தல் சூறை
20)பாகேர்கட் மாவட்டத்தில் 2 கோவில்களும் பந்தல்களும் சூறை
21)ஜலோகடி மாவட்டத்தில் 1 சிவன் கோவில், 1 காளி கோவில் சூறை
22)பிரோஜ்பூர் மாவட்டத்தில் 5 கோவில்களும் பூஜைப் பந்தல்களும் சூறை
23)சந்த்பூரில் 5 கோவில்கள் பந்தல்கள் மீது தாக்குதல்
24)ஜாகிகஞ்ச் பகுதியில் 6 பந்தல்கள் மீது தாக்குதல்
25)காக்ஸ் பஜார் பகுதியில் 200க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகளைத் தாக்கி சூறை
Source: Opindia
Image Courtesy: News18