'பஸ்தி சம்பர்க் அபியான்' - பட்டியலின வீடுகளுக்கு படையெடுத்த பா.ஜ.க நிர்வாகிகள், ஆடிப்போன எதிர்கட்சிகள்! அசுரவேகத்தில் தமிழக பா.ஜ.க

பா.ஜ.க'வின் பட்டியலின மக்களை சந்திக்கும் 'பஸ்தி சம்பர்க் அபியான்' நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள் அனைவரும் பட்டியலின மக்களை அவர்தான் வீடுகளுக்கு சென்று சந்தித்து வருவது எதிர்க்கட்சிகள் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-11-14 02:36 GMT

பா.ஜ.க'வின் பட்டியலின மக்களை சந்திக்கும் 'பஸ்தி சம்பர்க் அபியான்' நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள் அனைவரும் பட்டியலின மக்களை அவர்தான் வீடுகளுக்கு சென்று சந்தித்து வருவது எதிர்க்கட்சிகள் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் அடுத்தடுத்து தமிழகம் வருகை புரிந்தனர். இதில் பிரதமர் மோடி திண்டுக்கல்லில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனியார் நிறுவனம் ஒன்றின் 75வது ஆண்டின் விழாவில் கலந்து கொண்டார்.

அப்பொழுது சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கமலாலயத்தில் பா.ஜ.க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தின் முடிவில் பா.ஜ.க நிர்வாகிகளுக்கு தமிழகத்தில் பாஜகவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு உண்டான அறிவுரைகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து நேற்று பாஜகவில் உள்ள அனைத்து தலைவர்களும் குறிப்பாக மாநில செயலாளர்கள் போன்ற அனைத்து தலைவர்களும் பட்டியலின மக்களை சந்திக்கும் 'பஸ்தி சம்பர்க் அபியான்' நிகழ்ச்சியை முன்னெடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டியலின மக்களை அவர்தம் வீடுகளுக்கே சென்று சந்தித்து அவர்தான் குடும்பத்துடன் உரையாடி உணவருந்தி பட்டிரின மக்களுக்கு பா.ஜ.க செய்து வரும் நன்மைகள், அவர்களுக்கு வழங்கும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து நேரத்தை செலவிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தி.நகரில் உள்ள பட்டியலின மக்களை சந்தித்தார், பாஜக மாநில செயலாளர் பிரமிளா சம்பத் அசோக் நகரில் உள்ள பட்டியலின மக்களை சந்தித்தார், மேலும் பா.ஜ.க'வின் அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் சேத்துப்பட்டு பிருந்தாவன் நகரில் உள்ள 108 வது வார்டில் பிரதமர் மோடியின் திட்டங்களை வீடு வீடாக சென்று கூறினார்.

பா.ஜ.க'வில் இருந்து அடுத்த கட்ட பாய்ச்சலாக பட்டியலின மக்களை நிர்வாகிகள் தொடர்ச்சியாக சந்தித்து வருவது எதிர்க்கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Source - SG.Suryah Tweet

Similar News