தயாராக இருங்கள் 5ஜி சேவையை தொடங்க - அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் இந்தியா

5ஜி சேவையை தொடங்க தயாராகுங்கள் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2022-08-19 06:45 GMT

5ஜி சேவையை தொடங்க தயாராகுங்கள் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு விடுத்துள்ளார். நாட்டில் 5ஜி சேவையை தொடங்குவதற்காக 5ஜி அலைக்கற்றை கடந்த மாதம் ஏலம் விடப்பட்டது. 72 ஆயிரத்து 98 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு முன்வைக்கப்பட்டது.

இவற்றில் 51 ஆயிரத்து 736 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டது.

ஜியோ நிறுவனம் என்பது 88 ஆயிரத்து 78 கோடிக்கும் ஏர்டெல் நிறுவனம் 43 ஆயிரத்து 48 கோடிக்கும் வோடபோன் ஐடியா நிறுவனம் 18,799 கோடிக்கும் அதானி குழுமம் 212 கோடிக்கு ஏலம் எடுத்தனர். மத்திய அரசுக்கு மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

ஏர்டெல் நிறுவனம் தான் எடுத்து அலைக்கற்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கான தொகை 8312 கோடியை மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு வழங்கியிருக்கிறது.

இந்த நிலையில் சம்பந்தபட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள்,5ஜி சேவையை தொடங்க தயாராகுமாறு மத்திய தொலை தொடர்பு மந்திரி வைஷ்ணவ் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே 5ஜி சேவையை தொடங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாராகுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மெட்ரோ நகரங்களில் அக்டோபர் மாதம் 5ஜி சேவை தொடங்கும் என்று அஸ்வினி வைஷ்ணவ் ஏற்கனவே கூறியுள்ளார்.எனவே தொலைதொடர்பு நிறுவனங்களின் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.



Similar News