பிளாக் செயின் தொழில்நுட்பம் - ஒரு பார்வை
'டிஜிட்டல் கரன்சி' எனப்படும் கண்ணுக்கு தெரியாத மின்னணு பணம் தொடர்பான பரிவர்த்தனைகளை கண்காணிக்க பிளாக் செயின் தொழில்நுட்பம் பயன்படுகிறது.
பிளாக் செயின் தொழில்நுட்பம் தொடக்கத்தில் பிட்காயினின் முதுகெலும்பாக உருவெடுத்தது. இது பரிவர்த்தனைகளின் அழியாத டிஜிட்டல் பொது பேரேடு(லெட்ஜர்) ஆகும். பிளாக் செயின் தொழில் நுட்பத்தை விளக்குவது என்றால் இரண்டாக பிரிக்கப்பட்ட ஒரு பணத்தின் ஒரு பகுதியை பயன்படுத்த மற்றொரு பகுதி அவசியம். அது இருந்தால் தான் அந்த பணத்தை பயன்படுத்த முடியும்.
அந்த வகையில் தான் ஒரு தொகுதி குறியீட்டின் மதிப்பை பயன்படுத்த மற்றொரு தொகுதி குறியீடு தேவை. அப்போதுதான் நாம் அதை செயல்படுத்த முடியும். இதை செய்வதுதான் பிளாக் செயின் தொழில்நுட்பமாகும். இதில் ஒரு வரிடம் இருந்து மற்றொருவருக்கு கரன்சிகளை விநியோகிக்கிறது. இந்த அமைப்பில் தேதி, நேரம் ஆகியவை குறியாக்க வடிவில் சேமித்து வைக்கப்படும். அதில் எந்த ஒரு தகவலையும் அழிப்பதோ மாற்றுவதோ கடினம்.
ஒவ்வொரு தகவல் பரிமாற்றமும் வலை இணைப்பு கணுக்கள் மூலமாகவும் பராமரிப்பாளர்கள் மூலமாகவும் சரிபார்க்கப்படும். வெளிப்படைத்தன்மை, பரவலாக்கம் பொறுப்பு கூறல், மாறாத தன்மை ஆகிய கொள்கையில் பிளாக் செயின் தொழில்நுட்பம் செயல்படுகிறது.