உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறுகிறாரா ஸ்டாலின் ?

Breaking News

Update: 2021-09-02 12:45 GMT

தேசிய பணமயமாக்கல் வழிமுறையை பற்றி சட்டசபையில் அவதூறு பரப்பியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

இன்றைய சட்டசபை கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, "நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள் நம் அனைவருடைய பொதுச் சொத்தாகும், நமது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும், சிறு குறு தொழில்களில் ஆணிவேராக விளங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கக்கூடிய பெருந்தொழில் நிறுவனங்கள் அவை என்பது எல்லோருக்கும் தெரியும். லாப நோக்கம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் மக்கள் நலன் கருதி இயங்கி வரக்கூடிய பொதுத் துறை நிறுவனங்களை விற்பதோ குத்தகைக்கு விடுவது தேச நலனுக்கு உகந்தது அல்ல என்பது நம்முடைய கருத்து எனவே, ஒன்றிய அரசினுடைய பொதுச் சொத்துக்களை தனியார்மயமாக்கும் போக்கினை எதிர்க்கக் கூடிய வகையிலே மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நான் இதை சுட்டிக்காட்டி நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்கக் கூடிய வகையில், கடிதம் எழுத இருக்கிறேன்" என குறிப்பிட்டு பேசினார்.

மத்திய அரசின் National Monetisation pipeline எனப்படும் தேசிய பணமயமாக்கல் கொள்கையில் அரசுக்கு சொந்தமான இடம் சாராத சொத்துக்களை 4 வருடம் மட்டும் தனியாருக்கு குத்தகைக்கு விடுவது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் அறிவிக்கப்பட்டது. 4 வருடம் முடித்தவுடன் மீண்டும் அது மத்திய அரசின் வசம் வந்துவிடும். ஆனால் இன்று சட்டசபையில் மத்திய அரசை குறை கூற வேண்டும் என்ற நோக்கில் பேசிய முதல்வர் ஸ்டாலின் "பொதுத் துறை நிறுவனங்களை விற்பதோ குத்தகைக்கு விடுவது தேச நலனுக்கு உகந்தது அல்ல" எனவும் "ஒன்றிய அரசினுடைய பொதுச் சொத்துக்களை தனியார்மயமாக்கும் போக்கினை" எனவும் குறிப்பிட்டு மத்திய அரசின் மீது அவதூறு பரப்பும் நோக்கில் பேசியுள்ளார். அதாவது விற்கவில்லை எனவும் மீண்டும் மத்திய அரசிடம் அந்த சொத்துக்கள் திரும்ப வந்துவிடும் என்ற போதிலும் "விற்கவோ" என்றும், "தனியார்மயமாக்கும்" எனவும் பேசியுள்ளார்.

மத்திய அரசின் மீதான முதல்வர் ஸ்டாலினின் அவதூறு பரப்பும் மனப்பான்மையே இதற்கு காரணம் என தெரிகிறது.


Source - Asianet NEWS

Tags:    

Similar News