வன்முறையைத் தூண்டும் கத்தோலிக்க திருச்சபைகள்! இந்துக்கள் மீது வன்மத்தைப் பரப்பியதால் புகார்!

இந்துக்களால் தாங்கள் ஒடுக்கப்படுவதாக சர்வதேச அமைப்புகளுக்கு தவறான தகவல் அளிப்பதாக ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா கத்தோலிக்க திருச்சபை மீது புகார் எழுந்துள்ளது

Update: 2021-02-10 07:00 GMT

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவின் கத்தோலிக்க திருச்சபை வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியைப் பயன்படுத்தி இந்தியாவைப் பற்றியும் இந்துக்களைப் பற்றியும் அவதூறு பரப்புவது தெரிய வந்துள்ளது. பொதுவாக கிறிஸ்தவ மத அமைப்புகள் தாங்கள் இந்தியாவில் அடக்குமுறைக்கு உள்ளாவதாக பரப்புரை செய்வது வழக்கம் என்றாலும், அதற்காக வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியைப் பயன்படுத்துவது FCRA விதிகளை மீறுவதாக அமையும்.

வெளிநாடுகளில் இருந்து நிதி பெற அவசியமான FCRA உரிமத்தை பெற்றுள்ள கும்லா கத்தோலிக்க திருச்சபை, இந்த வகையில் கிட்டத்தட்ட ₹24 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. இந்த நிதியை FCRA விதிகளை மீறி, இந்தியாவைக் குறித்தும் இந்துக்களைக் குறித்தும் ஆதாரமற்ற, தவறான தகவல்களை உலக அரங்கில் பரப்பியதாகவும், தாங்கள் ஒடுக்கப்படுவதாக சர்வதேச அமைப்புகளுக்கு பொய்யான தகவல்களை அளித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் ஸ்டேன் சுவாமி என்ற சமூகப் போராளி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்லா திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் போராட்டம் நடத்தியதும் தெரிய வந்துள்ளது. ஸ்டேன் லூர்து சுவாமி என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜெசூயிட்(Jesuit) பாதிரியார். Jesuit பாதிரியார்கள் Liberation Theology என்ற சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள்.

இவர்கள் சமூகத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது போல் இந்துக்கள் இடையே சமூகப் போராளிகளாக ஊடுருவி, அவர்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் பல இடங்களில் தாங்கள் பாதிரியார்கள் என்பதை மறைத்து Jesuit பாதிரியார்கள் சமூகப் போராளி வேடத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

உதாரணமாக மகாராட்டிர மாநிலம் பால்கரில் இரு சாதுக்கள் அடித்தே கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிரதீப் பிரபு என்பவர் அவருடைய NGO மூலம் சட்ட ரீதியான உதவிகள் செய்வதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. இந்த பிரதீப் பிரபு, பீட்டர் டிமெல்லோ என்ற பெயரில் Jesuit பாதிரியாராக அதே பால்கர் பகுதியில் பழங்குடியின மக்களை மதம் மாற்ற கத்தோலிக்க திருச்சபையால் அனுப்பி வைக்கப்பட்டவர். 

பழங்குடியினரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அவர்களது பிரச்சினைகளுக்கு உதவுவது போல் சமூக ஆர்வலராக பணிபுரிந்து அவர்களை மதம் மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். பாதிரியார் ஸ்டான் சுவாமியும் இதே போன்று பழங்குடியினர், தலித்களைத் தூண்டி விட்டு வன்முறையில் ஈடுபட வைத்ததாக குற்றஞ்சாட்டு எழுந்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த எல்கர் பரிஷத்(Elgar Parishad) என்ற நிகழ்வில் ஸ்டான் சுவாமி உட்பட அர்பன் நக்சல்கள் சிலர் வன்முறையைத் தூண்டும் வண்ணம் பேசியதே 2018ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று பீமா கோரேகான் நினைவு நாளில் வன்முறை நிகழக் காரணம் என்று தேசிய பாதுகாப்பு முகமை அவரைக் கைது செய்தது‌. இவ்வாறு இருக்கும் போது ஸ்டேன் சுவாமியை ஆதரித்தும் அவரது கைதை எதிர்த்தும் கத்தோலிக்க திருச்சபையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கைது செய்யப்பட்ட ஸ்டான் சுவாமிக்கு கும்லா திருச்சபையைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவிப்பதால் LRO அமைப்பு உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது. FCRA உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்துள்ளது.

Similar News