நாங்க எப்ப 8 வழி சாலை வேண்டாம்'ன்னு சொன்னோம் - அந்நியன், அம்பி'யாக நடிப்பில் அசத்தும் தி.மு.க
எட்டு வழி சாலை திட்டத்திற்கு தி.மு.க எதிரி அல்ல என்று அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.;
சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டம் குறித்து சட்ட நீதிமன்றத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க ஸ்டாலின் அவர்கள் கூறுகையில் எட்டு வழி சாலை அமைக்கும் விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாக நின்று பேசுவோம் என்று கூறினார். குறிப்பாக தி.மு.கவை சேர்ந்த அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், "10 கோடி செலவில் செயல்படுத்தப்படும் திட்டத்தில் மூன்று கோடி செலவை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கப் பார்க்கிறார் என்று தன்னுடைய கருத்தை அவர் தெரிவித்து இருந்தார். இதனை தி.மு.க அரசு வன்மையாக கண்டித்து இந்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளும்" என்றும் கூறியிருந்தார்.
ஆனால் தற்போது தி.மு.க ஆட்சியை கைப்பற்றி தமிழக பொதுப் பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு அவர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார். மேலும் அவர் மதுரை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, சென்னை மற்றும் சேலம் எட்டு வழி சாலை திட்டம் பற்றி கேட்கப்பட்டுள்ளது. எட்டு வழி சாலைத்திட்டத்திற்கு எப்பொழுதும் தி.மு.க எதிராக இருந்தது இல்லை. சாலைகளை விரிவு படுத்துவதற்காக நிலங்களை கையகப்படுத்தி தான் ஆக வேண்டும். 8 வழி சாலை திட்டத்திற்கு நாங்கள் எப்பொழுதும் எதிர்ப்பும் தெரிவித்தது இல்லை, ஆதரவும் தெரிவித்து இல்லை என்பது போல் கருத்துக்களை இப்போது கூறி இருக்கிறார்.
எனவே தி.மு.க அரசாங்கத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் மாறிமாறி கூறியிருக்கும் கருத்துக்கள் மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்த இருக்கின்றது. 2019 அன்று அமைச்சர் பேசுகையில் 10 கோடி திட்ட செலவு என்று கூறி மூன்று கோடி ரூபாயை அ.தி.மு.க அரசு கமிஷனாக அடிக்க பார்க்கிறது என்று அவர் கூடி இருக்கிறார். ஆனால் தி.மு.க இந்தத் திட்டத்தை 2022 கையில் எடுத்து இருப்பது கமிஷன் அடிக்கவா? அல்லது மக்களுக்கு நன்மை செய்யவா?
Input & Image courtesy: News