சீனா: திபெத்திய மொழியில் பள்ளிப் பாடம் கோரிய 19 வயது இளைஞன் கைது !
ஷெராப் டோர்ஜி என்ற அந்த இளைஞன் சீன கம்யூனிஸ்ட் பிரச்சாரத்திலும் சேர மறுத்துவிட்டார்.
திபெத்திய மொழியில் கல்வி கோரி வேண்டுகோள் விடுத்த 19 வயதான திபெத்திய சிறுவன், சீன அரசுக்கு எதிராக கலகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கிழக்கு திபெத்திய மாகாணமான அம்டோவில் சீன போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டான். தனது பள்ளிப் பாடங்களை திபெத்திய மொழியில் கற்பிக்க அனுமதிக்குமாறு கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
ஷெராப் டோர்ஜி என்ற அந்த இளைஞன் ட்ரொட்ஸிக் டவுன்ஷிப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சீன கம்யூனிஸ்ட் பிரச்சாரத்திலும் சேர மறுத்துவிட்டார் என்று திபெட்வாட்ச் செய்திகள் தெரிவிக்கிறது.
திபெத்வாட்ச் அறிக்கையின்படி, ஆகஸ்ட் 14 அன்று, பல சீன காவல்துறையினர் ட்ரொட்ஸிக் நகரத்திற்கு வந்து திபெத்திய இளைஞர்களுக்கான பிரச்சாரக் கூட்டத்தை நடத்தினர், பின்னர் ஷெராப் டோர்ஜியை, மேலும் சில மாணவர்களுடன் சேர்த்து கைது செய்தனர். டோர்ஜியைத் தவிர கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் போது சீன மொழியில் மட்டுமே பாடம் நடத்த வேண்டும் என்ற மாவட்ட அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு எதிராக ஒரு மனுவை டோர்ஜி சமீபத்தில் சமைப்பித்ததால் தான் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒரு ஆதாரம் திபெத்வாட்சிற்கு கிடைத்தது.
சிச்சுவான் மாகாணத்தில் உள்ள அனைத்து டவுன்ஷிப் மற்றும் மாவட்ட அளவில், சீன அதிகாரிகள் சமீபத்தில் சிசிபியின் பிரச்சார அரசியல் கல்வியை அமல்படுத்தவும் மற்றும் இளம் திபெத்தியர்கள் சீன மொழியைக் கற்றுக்கொள்ளவும் பல பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
திபெத்தியர்கள் சீன மொழி பேசுவதையும் "சீன நாட்டின் கலாச்சார அடையாளங்களையும் பெயரையும்" பகிர்ந்து கொள்வதையும் உறுதிப்படுத்த "அனைத்து முயற்சிகளும்" தேவை என்று வியாழக்கிழமை சீன உயர் அதிகாரி வாங் யாங் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
திபெத்தின் பாரம்பரிய புத்த தலைவர்களின் இல்லமான லாசாவில் உள்ள பொட்டலா அரண்மனைக்கு முன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்கள் முன் வாங் யாங் இந்த கருத்தை வெளியிட்டார்.
Cover Image Courtesy: TibetWatch