ஐக்கிய நாடுகள் சபையில் வளரும் சீனாவின் செல்வாக்கு - கவலை கொள்ளும் நாடுகள்!

Update: 2021-04-16 00:30 GMT

கொரானா வைரஸ் முதல் தொற்று, டிசம்பர் 8, 2019 அன்று சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. அப்போதிலிருந்து மார்ச் 20, 2021 வரை உலகெங்கிலும் 123 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.7 மில்லியன் மக்கள் இறந்து விட்டனர். உலகம் இந்த பேரழிவிற்கு யார் பொறுப்பு? யார் காரணம்? என்ற விவகாரங்களை சமாளித்து வரும் வேளையில், சர்வதேச அமைப்புகள் அரசியல்மயமாக்கபட்டிருப்பதை இவை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

உதாரணமாக உலக சுகாதார அமைப்பில் (WHO) சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதை குறித்து அனைவரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த வைரஸ் உலகெங்கிலும் பரவுவதற்கு முக்கியமான காரணம் தேவையான நேரத்திற்கு தகவல்களோ அல்லது வெளிப்படைத் தன்மையை இல்லாமல் இருந்ததும், அது கிடைத்த பொழுது தேவையான அவசரத்துடன் செயல்பட தவறியதும் ஆகும்.

சீனா டிசம்பர் 3, 2019 வரை உலக சுகாதார மையத்திடம் தொற்றுகளை சமர்ப்பிக்கவில்லை. உலக சுகாதார மையத்தின் அவசரகால கமிட்டி ஜனவரி 22ஆம் தேதி வரை கூடவில்லை.

அவர்கள் இன்னும் ஒரு வாரம் கழித்து தான் சர்வதேச அவசரநிலையை அறிவித்தனர். கடைசியில்மார்ச் 11,2020ல் தான் இது ஒரு பெரும் தொற்று என்று உறுதிப்படுத்தினர். அதற்குள் சீனாவில் இருந்து ஆயிரக்கணக்கான உலகெங்கிலும் மக்கள் தொற்றுடன் பயணித்து அதைப் பரப்பத் தொடங்கிவிட்டனர்.

பல்லாண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபையில் யார் அதிகம் நிதி அளித்து இருக்கிறார்களோ அவர்களுடைய பேச்சுப்படி தான் நடப்பது என்பது சொல்லப்படாத ஒரு விதியாக இருக்கிறது. அமெரிக்காதான் பல ஐக்கிய நாடுகள் ஏஜென்சிகளின் பட்ஜெட்டுக்கு குறிப்பிடத்தகுந்த நிதி ஒதுக்குகிறது.

உதாரணமாக உலக சுகாதார மையத்தில் 25 சதவிகிதம், UNESCO விற்கு 36.6 %, உலக உணவு திட்டத்திற்கு 2.5 பில்லியன் டாலர்கள் நிதி அமெரிக்காவால் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இத்தகைய நிதி பங்களிப்புகளை அரசியல் ரீதியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் காலத்தில் அமெரிக்கா பல தரப்பு ஏற்பாடுகளில் இருந்து விலகிக் கொண்டது.

பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தம், ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு, ட்ரான்ஸ் பசுபிக் கூட்டாண்மை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில், ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம், இடம்பெயர் விற்கான உலகளாவிய போராட்டம், ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவற்றில் இருந்து விலகியுள்ளது.

இதில் பல நேரங்களில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் ஏஜென்சிகளின் செயல்பாட்டை காரணமாக காட்டி விலகிக் கொண்டுள்ளது. உதாரணமாக 2011 இல் அமெரிக்க அதிபர் ஒபாமா UNESCO நிறுவனத்திற்கு அளித்து வந்த நிதி பங்களிப்பை விலக்கிக் கொண்டார். அவ்வமைப்பு பாலஸ்தீனத்திற்கு முழு நாடு என்று கூறி உறுப்பினர் அந்தஸ்தை வழங்கி இருந்தது.

உலக வர்த்தக அமைப்பும் பெரிய பெரிய அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்கா - சீனா வர்த்தக போரின் போது இது வெளிச்சத்திற்கு வந்தது. அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேற வில்லை என்றாலும் டிரம்ப் இந்த அமைப்பிற்கு நீதிபதிகளை அமைப்பதை தடுத்து இதைப் பெரிதும் பலவீனமடையச் செய்தார்.

அமெரிக்கா டிரம்ப் ஆட்சியின் கீழ் இருந்த பொழுது, தாங்கள் நிதி கொடுத்துக் கொண்டிருந்த பல நிறுவனங்களிடம் இருந்து வெளியேறிய பொழுது, சீனா தன்னுடைய பங்களிப்பை அதிகரித்து வந்தது.

உலக சுகாதார மையத்தின் தற்போதைய நிலவரப்படி சீனா அதனுடைய உலகளாவிய செல்வாக்கின் காரணமாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவை விட மிகக் குறைவான நிதி பங்களிப்பே (9%) சீனா அளித்து வந்தாலும், இந்த தாக்கம் அதிகரித்து வருகிறது.

ஐக்கிய நாடுகளின் 17 சிறப்பு ஏஜென்சிகள் மற்றும் குழுக்களில் சீன பிரதிநிதிகள் நான்கு ஏஜென்சிக்களை வழி நடத்துகிறார்கள். உணவு மற்றும் விவசாய அமைப்பு, சர்வதேச விமானத்துறை அமைப்பு, சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் தொழில் முன்னேற்ற நிறுவனம் ஆகியவற்றை வழி நடத்தி வருகிறார்கள். சீனா ஒரு நாடுதான் ஒன்றிற்கும் மேற்பட்ட ஏஜென்சிக்களை வழிநடத்தி வருகிறது.

இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையில் செல்வாக்கு பெறுவது சீனாவால் சர்வதேச கண்காணிப்பில் இருந்து தப்பிக்க உதவுகிறது. மேலும் சர்வதேச விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகளை வடிவமைக்கவும் சீனாவிற்கு இது உதவுகிறது என்று கூறியிருக்கிறது.

2016இல் சர்வதேச நீதி மன்றம், தெற்கு சீன கடல் பகுதியில் சீனாவுக்கு உரிமை இல்லை என்று கூறி இருந்தாலும் அந்த தீவை சீனா தொடர்ந்து இராணுவ மயமாக்கி வருகிறது. கிட்டத்தட்ட நூறு நாடுகளுக்கு மேல் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு இனிசியேட்டிவ் திட்டத்தில் இணைந்துள்ளனர். சர்வதேச விவகாரங்களில் இதனால் அவர்கள் சீனாவின் பக்கம் இருதரப்பு உறவு மற்றும் முதலீடு காரணமாக ஆதரிக்க வேண்டியிருக்கிறது.

சீனா, இரு தரப்பு உறவுகளை தன்னுடைய கொள்கை காரணங்களுக்காக உபயோகப்படுத்தி கொள்கிறது. உலகம் வைரஸ் பிரச்சினையை ஒன்றிணைந்து சமாளிக்க தயாராக இருக்கவில்லை. உலக சுகாதார அமைப்பு ஆரம்பத்திலேயே எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டும், ஆனால் கொடுக்கவில்லை. எனவே வருங்காலத்தில் சர்வதேச அமைப்புகள் அரசியல் மயமாவதை நாம் தடுக்க வேண்டும். இல்லையெனில் இது சர்வதேச சமூகத்திற்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

ஐக்கிய நாடுகள் அமைப்புகளை சீர் செய்வது, புதிய விதிமுறைகளை வழிவகுப்பது, ஒரு ஜனநாயக பலதரப்பு முறையில் ஏற்றுக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.

இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பற்றி குறிப்பிட்டு கூறியுள்ளது. உதாரணமாக சிரியா பிரச்சனையில் இந்தியா, இந்த விவகாரம் அரசியல் மயமாக்கப்பட்டதால் தான் பிரச்சனை அதிகமானதாகவும் இந்த மனிதாபிமான நெருக்கடி அரசியல் மயமாக்குதலில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.

இந்தியா, ஐக்கிய நாடுகள் திருத்தம் செய்யப்பட்டு மறு கட்டமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இன்னும் வளரும் நாடுகளின் தேவைகளை கருத்தில் கொண்டு முன்னேற வேண்டும் என்று கூறுகிறது. 2020 செப்டம்பரில் பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சீர்திருத்தம் தான் இப்போதைக்கு தேவையான ஒன்று என்று தெரிவித்தார். கடைசியாக வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச சமூகத்தை பாதிக்கும் பிரச்சினைகளில் தரவுகளை பகிர்ந்து கொள்வதும் முக்கியமானதாகும்.

சர்வதேச அளவில் எதிர்கால பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கும் இந்த உலகத்தில் இத்தகைய அணுகுமுறை அவசியமானது. எவ்வளவு சக்தி வாய்ந்த நாடாக இருந்தாலும் ,எந்த நாடும் தனியாக ஒரு பிரச்சினையை சமாளிக்க முடியாது.

இந்த உலகம், நாடுகள் தங்களுடைய சுயநல லட்சியங்களை விட்டுவிட்டு, பெரும் பேரழிவுகளை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்வதை விட்டு விட்டால் உலகம் நல்ல இடமாக இருக்கும். இதற்கு சர்வதேச அமைப்புகள் அரசியல்மயமாக்குவதை சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்.

Courtesy: ORF

Tags:    

Similar News