இந்தோ-பசுபிக் கடல் பகுதியில் வலிமையடையும் சீனா: மற்ற நாடுகளின் திட்டம் என்ன?

Update: 2021-04-05 03:05 GMT

இந்தியப்பெருங்கடலில் சீனாவின் வளர்ந்துவரும் தடங்களை எப்படி இந்தோ பசிபிக் கடற்படையினர் சமாளிக்க போகிறார்கள் என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆசியாவில் வளர்ந்துவரும் சீனாவை பற்றி பல இராணுவத் தளபதிகளும் தங்களுடைய பதற்றங்களை வெளிப்படுத்தினர்.

ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்த நிபுணர்கள் 2019 இல் நடந்த ஒரு விவாதத்தில் கலந்து கொள்ளும் பொழுது, இத்தகைய கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்திய கடற்படை தளபதி அட்மிரல் இதுகுறித்து கூறுகையில், சீன கடற்படை ஏற்கனவே இந்திய பெருங்கடலில் ஒரு சக்தியாக மாறி வருவதாக கூறி இருக்கிறார்.

தங்களுடைய இராணுவ திறன்களை வளர்த்துக் கொள்வதில் அதிக பணம் மட்டும் செலுத்துவது போதாதென்று, சீன ராணுவம்  பிரமாண்ட கட்டமைப்பையே நவீனப்படுத்தி வருகிறது. கடந்த ஐந்து வருடங்களில் கடற்படையை நவீனப்படுத்துவது, கப்பல்கள் கமிஷன்கள் செய்யப்பட்டிருப்பது சீன கடற்படை எந்த அளவு திட்டங்களைத் தீட்டி வலிமை அடைய வைத்திருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் ஆகும் என்று தெரிவித்தார்.

பிரான்ஸ் கடற்படை தளபதி அட்மிரல் தெரிவிக்கையில் பிரான்ஸ் கடற்படை வளர்ந்து வரும் விஷயங்களை கண்காணித்து வருவதாகவும் இது தொடர்பாக தங்களுடைய சொந்த விதத்தில் அவர்களை டீல் இருப்பதாகவும் தெரிவித்தார். இதில், இந்திய கடற்படையுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது, இருவரும் சேர்ந்து இந்தோ பசிபிக் கடல் பகுதிகளில் கடற்படை ஒத்திகைகள் நடத்துவது ஆகியவற்றை உள்ளடக்கும்.

மேற்கு இந்திய பெருங்கடலில் சீனா ஒரு ராணுவ தளத்தை அமைத்து இருப்பது இந்த விவாதங்களுக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. ஜப்பான் தற்காப்பு படையினரின் தளபதி, ஆசிய கடல்களில் சீனாவின் முரட்டுத்தனமான திட்டங்களை குறித்த தனது அச்சங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டார்.

ஜப்பானுக்கும் சீனாவுக்கும் உண்மையான மோதல்கள் கிழக்கு-சீன கடலில் நடந்தாலும் தெற்கு சீன கடலில் பாதுகாப்பு அளிப்பது ஜப்பானின் கடமை என்றும் தெரிவித்தார். ஒட்டுமொத்த கடல் பாதுகாப்பின் கூட்டுறவில் ஜப்பானும் பங்களிக்கும் என்று தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சியின் காரணமாக கிழக்கு ஆசிய பாதுகாப்பை கூட அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய பாதுகாப்பு படைகளின் ஜெனரல் அண்ட் ஜூஸ் கேம்பல் கூறுகையில் ஆஸ்திரேலியா இந்தோ பசிபிக் கடற்பகுதிகளில் முக்கிய கவனத்தை செலுத்தி வருவதாகவும் அனைத்து பிராந்திய நாடுகளின் நன்மைகளையும் பாதுகாக்கும் விதத்திலேயே ஆஸ்திரேலியாவின் ஈடுபாடு அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்க இந்தோ பசுபிக் கமாண்டர் அட்மிரல் பிலிப் டேவிட்சன் குறிப்பிடுகையில் விதிகளின் அடிப்படையிலான உள்ளடங்கிய திறந்த இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் உருவாக்க அனைத்து பிராந்திய கூட்டாளிகளுடன் ஒத்துழைப்புடன் செயல்பட அமெரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

சீனாவின் கடற்படை விரிவுபடுத்துதல் தான் தென் ஆசியாவில் சீனாவின் முக்கியமான நோக்கமாகும் என்று கூறப்படுகிறது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டங்கள் இந்திய பெருங்கடலில் ராணுவ தளங்களை உருவாக்குவதற்கு முக்கியமான அடிப்படையாகும். கடற்படை கப்பல்களை கட்டுவதில் சீனா தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இது விமானம் தாங்கி கப்பல்களையும் உள்ளடக்கும். இந்திய பெருங்கடலில் இரண்டு இத்தகைய கப்பல்கள் நிர்வகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனால் ஜப்பானும் அமெரிக்காவும் சேர்ந்து கூட இந்திய பெருங்கடல் பகுதிகளில் தங்களுடைய சொந்த விமான தாங்கிகளை புகுத்தி வருகிறார்கள். இந்தியா இந்த பிராந்தியத்தில் முக்கியமான பாதுகாப்பு வழங்குவதாக இருந்தாலும் இந்த விஷயத்தில் சற்று பின்னடைவாகவே இருக்கிறது. சீன நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருப்பது இந்தியாவிற்கு மிகப் பெரிய சவாலாகும்.

கடற் கொள்ளையர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுடன் எல்லாம் ஒரு நீர்மூழ்கி கப்பலும் கூடவே வருகிறது. இந்தியாவின் கடல் பகுதிகளின் தொடர்ச்சியாக இவை முக்கியமான தகவல்களை சேகரிப்பதாகவும் தெரிகிறது. ஆனால் இந்தியாவும் இந்த விஷயத்தில் தற்போது முன்னேறி வருகிறது.

ஆனால் சீன கடற்படை நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிவதில் இந்தியா முன்னேறி உள்ளதா என்ற கேள்விக்கு சரியாக விடை கிடைக்கவில்லை. அமெரிக்கா மற்றும் ஜப்பான் உடன் நடந்த மலபார் கடற்போர் ஒத்திகைகள் இதில் ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியது. QUAD நாடுகள் ஏன் ராணுவ கூறுகளைக் கொண்டிருக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. 

Reference: ORF

Tags:    

Similar News