இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்க சதி - கிறித்தவ மிஷனரி NGOவின் கிழிந்த முகத்திரை.!

இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்க சதி - கிறித்தவ மிஷனரி NGOவின் கிழிந்த முகத்திரை.!

Update: 2020-12-03 09:24 GMT

'Persecution Relief' என்ற ஒரு கிறிஸ்தவ NGO இந்தியாவில் 'துன்புறுத்தப்படும்' கிறிஸ்தவர்களுக்கு உதவுவதாக கூறிக்கொண்டு தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இந்த அமைப்பு நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும் குற்றங்களை கணக்கெடுத்து ஒன்றிணைத்து, அவ்வப்போது அறிக்கைகளாக தயார் செய்து அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மத பரப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கிறது. இப்படி அவர்கள் கணக்கெடுக்கும் குற்றங்களில் பெரும்பாலானவை, மதமாற்றம் செய்யும் ஒரே காரணத்திற்காக கிராமங்களுக்கு செல்லும் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கும் அங்குள்ள உள்ளூர் மக்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளாகும். 

இவைகளைக் கணக்கெடுத்து ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களும் இந்தியாவில் துன்புறுத்தப்படுவதாக ஒரு காட்சியை உருவாக்குவது தான் இவர்களின் திட்டம்.

 இப்படி குற்றங்களை ஆவணப்படுத்துவது சட்டப்படி முறையானது தான். ஆனால்  கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றங்களுக்கு மதவாத சாயம் பூசி, சர்வதேச நாடுகளின் முன்னால் இந்தியாவை ஒரு சகிப்புத்தன்மை அற்ற நாடாக காட்டி, ஹிந்துக்களின் மதிப்பை உலகெங்கிலும் கெடுத்து, கிறிஸ்தவ மதமாற்றத்தை மறுக்கும் அப்பாவி குடிமக்களுக்கு 'மதவெறியர்கள்' என்று பட்டம் சூட்டுவது தான் இதன் திட்டம் என்பதை இங்கே நாம் குறிப்பிட வேண்டும்.  

உண்மையில், பத்திரிக்கைகள் /ஆன்லைன் தளங்களில் இதே குற்றங்களை குறித்த அறிக்கையும் Persecution Relief அமைப்பால் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் பெரிதும் வேறுபடுகிறது. 

ஷிபு தாமஸ் என்ற மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரால் Persecution Relief அமைப்பு 2015ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்தவர்கள் 'துன்புறுத்தப்படும்' வழக்குகளை கணக்கெடுத்து, சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க கவுன்சில் (USCIRF) உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளிடம் கொடுத்து வருகின்றது.

 ஷிபுவைப் பொறுத்தவரை, Persecution Relief அமைப்பிடம் 28 மாநிலங்களை சேர்ந்த 300 வாட்ஸ் அப் குழுக்கள், மேலும் மாவட்ட வாரியாக மற்றும் மாநில வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கின்றனர் என்கிறார். பெரும்பாலான சர்ச்சுக்களை பிரதிநிதிப்படுத்தி மொத்தம் 50,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட இந்த Persecution Relief அமைப்பு அவ்வப்போது, 'கிறிஸ்தவர்களின் மேல் தாக்குதல்',  'கிறிஸ்தவர்கள் கைது' உள்ளிட்ட செய்திகளை வெளியிடுகின்றன.

இது போதாதென்று 'துன்புறுத்தப்படும்' கிறிஸ்தவர்கள் புகார்  செய்ய ஒரு கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்ணையும் வைத்துள்ளனர். இவர்கள் கொடுக்கும் ஆவணங்கள் கிறிஸ்தவ நிறுவனங்களான, வட அமெரிக்காவின் இந்திய கிறிஸ்தவ அமைப்புகளின் கூட்டமைப்பு (FIACONA) போன்ற கிறிஸ்தவ அமைப்புகளால் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தரவுகள் பின்னர் அமெரிக்க அரசியல்வாதிகள், சர்ச் அமைப்புகளுடன் லாபி செய்து மத சுதந்திரத்தை பொறுத்தவரை 'கவலை தரக்கூடிய நாடு' என இந்தியாவை வகைப்படுத்தியும், இதற்காக இந்தியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விதிக்க அழுத்தம் கொடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

 இதுவரை அவர்கள் 2016 ஆம் ஆண்டு முதல் 2500 க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை கிறிஸ்தவர்கள் 'துன்புறுத்தப்பட்டனர்' என்று ஆவணப்படுத்தியதோடு இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள், அரசியல்வாதிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கும் இவ்வறிக்கையை அளித்துள்ளனர்.

 அவர்கள் சர்ச்சுக்களை அரசியல், நீதித்துறை மற்றும் பண ரீதியாக தலையிட்டு ஆதரிக்கின்றனர்.

 இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்க சதி: 

சர்வதேச உலகத்தின் முன்னால் இந்தியாவின் மதிப்பிற்க்கும் பெயருக்கும் கடும் பாதிப்பு இத்தகைய அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே, இந்தியா சிறுபான்மையினர் மத சுதந்திரத்தை பொருத்தவரை 'கவலை தரக்கூடிய நாடு' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான USCIRF அறிக்கையில் இந்தியா, சீனா, வட கொரியா, சவுதி அரேபியா போன்ற மதச் சுதந்திரம் சிறிதும் இல்லாத நாடுகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

 இதற்காக பல காரணங்கள் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளன. அதன் முக்கியமான காரணம், கிறிஸ்தவர்கள் இந்தியாவில் 'துன்புறுத்தப்படுவது' எனக் கூறப்பட்டுள்ளது. 

 2019ல் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அடித்தளமாகக் கொண்ட கண்காணிப்புக் குழுவான ஓபன் டோர் எனும் அமைப்பின் படி இந்திய கிறிஸ்தவர்கள் வாழ்வதற்கு பத்தாவது ஆபத்தான நாடு என்று இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதே அமைப்பு 2014இல் இந்தியாவை 28வது இடத்தில் வைத்திருந்தது.

 இந்தக் குழுவும் Persecution Relief அமைப்பின் ஆவணங்களின் மூலம் ஈர்க்கப்படுகிறது.  சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் (LPRF) என்ற அமைப்பு இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக சட்டரீதியாக பாடுபட்டு வருகிறது. இவ்வமைப்பு Persecution Relief  ஆவணப்படுத்திய 8 வழக்குகளை ஆராய்ந்து பார்த்ததில் அவை இந்துக்களின் மீது பழியை போடுவதற்காக நடந்த தனிப்பட்ட குற்றங்கள் என்றும் மத ரீதியான வெறுப்புக் குற்றங்கள் இல்லை என்றும் கண்டறியப்பட்டது.

 FIACONA என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய வெபினாரில், இந்தியா சிறுபான்மையினரை 'துன்புறுத்தும்' நாடுகள் பட்டியலில் 2015ல் 28 ஆவது இடத்தில் இருந்து தற்பொழுது பத்தாவது இடத்திற்கு வந்து உள்ளதை குறித்து திருப்தியை வெளிப்படுத்தினர். ஆனால் அமெரிக்க அரசாங்கத்தால் இந்தியா மீது எந்த பொருளாதார தடைகளை விதிக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர். 

Full View

 

இதில் ஒரு முரண்பாடாக இந்த வெபினாரின் தலைப்பு 'இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள்'. ஆனால் இதில் பேசிய வில்சன் ஆப்ரஹாம் என்ற பெந்தகோஸ் சர்ச்சின் தலைவர் கூறுகையில், ஒரு மாநிலத்தில் 10 வருடங்களில் 300 சர்ச்சுகளில் இருந்து 1800 சர்ச்சுகளாக தாங்கள் வளர்ந்து விட்டதாக பெருமிதத்துடன் கூறினார். நான்காம் தலைமுறையாக சர்ச்சுக்கு செல்பவர்கள் இருப்பதாகவும் பஞ்சாபில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் பெருமளவு முன்னேற்றம் இருப்பதாகவும் கூறினார். கடவுளின் மிகப்பெரிய பணியாகிய, மூன்றாம் உலக நாடுகளின் மக்களை கிறிஸ்துவை அடைய வைப்பது எப்படி என்பதற்கான திட்டங்களையும் விவரித்தார்.

 அவர் மேலும் கூறுகையில், ஒரிசாவிலும் மத்திய மற்றும் வட மாநிலங்களிலும் நல்ல விஷயங்கள் நடப்பதாக குறிப்பிட்டார். தங்கள் வேலைகளுக்கு அந்த அளவுக்கு பெரிய தடை இல்லை என்றும் கூறினார். இந்தியாவில் 6 முதல் 8 சதவீதம் ஏசுவை பிரார்த்திப்பவர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 பொழுதுபோக்கு துறை, விளையாட்டு, கல்வி, அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், செய்தித்தாள்கள் மற்றும் வணிகர்கள் ஆகிய ஏழு களத்தினை சர்ச்சின் கீழ் அவர்கள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.

 மற்றொரு பேச்சாளர் ஜான் பிரபுதாஸ் கூறுகையில், அமெரிக்காவின் அதிகாரிகளிடம் இந்தியாவிற்கு பொருளாதார தடைகள் விதிக்கப்படாமல் இருப்பது குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்தாகக் கூறினார். இந்நிலை சீக்கிரமே நிலைமை மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் பின்னால் பேசிய Persecution Relief ஷிபு தாமஸ், தன்னை கடவுளுக்கு பணி செய்பவராக அறிமுகப்படுத்திக் கொண்டார். அவருடைய அமைப்பிற்கு FRCA அங்கீகாரம் இருந்ததாகவும், அதைப் புதுப்பிப்பதற்கு 22 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் இதனால் வருமான வரி நோட்டீஸ் தனக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

  தாமஸ் இதற்கு முன்னால் மத்திய பிரதேசத்தில் உள்ள பா.ஜக.வில் மைனாரிட்டி பிரிவிற்கு பொறுப்பேற்றதாகவும் கூறுகிறார். 2015இல் இந்த Persecution Relief அமைப்பை ஆரம்பித்ததாக கூறுகிறார். (2015 வரை இந்தியா 'கவலைக்குரிய நாடாக' அறிவிக்கப்படவில்லை) 

 தற்போது அவர்கள் எதிர்கொள்ளும் மிக கடினமான பிரச்சினை சமூகப் புறக்கணிப்பு என்கிறார் தாமஸ். சட்டீஸ்கரில் நடந்த ஒரு சம்பவத்தில், உள்ளூர் கிராமவாசிகள் புதிதாக மதம் மாறிய கிறிஸ்தவர்களை சமூக புறக்கணிப்பு செய்வதாகவும், இதனால் அந்த ஹிந்துக்களுக்கு 'மத வெறியர்கள்' என்றும் பட்டம் சூட்டுகிறார் இந்த தாமஸ்.

 கிராமத்தில் எந்த கிறிஸ்தவ போதனைகளும் அனுமதிக்கப்படமாட்டாது போன்ற அடையாள பலகைகள் அவர்களின் முயற்சிகளில் பெரிய பிரச்சினையாக மாறி உள்ளன என்று கூறுகிறார். ஹிந்துவில் இருந்து கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களால் சமூக புறக்கணிப்பைத் தாங்க முடியவில்லை என்றும், மதம் மாறியவர்களுடன் பேசுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் கூறினார். மதம் மாறியவர்கள் பொது இடங்களில் தண்ணீர் பிடிக்க அனுமதிக்கப்படவில்லை, அவர்களுக்கு வேலை கொடுக்கப்படுவதில்லை, அவர்களுக்கு கடைகளில் எந்தப் பொருளும் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார். மறுபடியும் இந்து மதத்திற்கு வருவதற்கு அவர்களுக்கு கிராமவாசிகள் நிறைய அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

 Persecution Reliefற்கும் காங்கிரசுக்கும் என்ன தொடர்பு?

 சட்டீஸ்கரில் நடந்த மேற்கண்ட சம்பவம் தொடர்பாக சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் அதற்கு பதில் பெற்றதாகவும் கூறுகிறார் தாமஸ். தற்போது சட்டீஸ்கர் ஆண்டு வரும் காங்கிரஸ் முதல்வரிடம் தனக்கு ஒரு அப்பாய்ண்ட்மெண்ட் கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார்.

 அவர் 2019 பிப்ரவரியில்  அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தியை சந்தித்து, 2018ல் கிறிஸ்தவர்கள் 'துன்புறுத்தப்படும்' அறிக்கையின் நகலை அவரிடம் கொடுத்தார். 

 

மேலும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்ததாகவும் மதமாற்றத்திற்கு எதிரான சட்டத்தை ரத்து செய்வது குறித்து தனக்கு வாக்குறுதி அளித்திருந்தார் எனவும் கூறினார். 

 

இதன் விளைவாக ஜார்க்கண்டில் உள்ள அரசாங்கம் சமீபத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இதில் பழங்குடி சமூகங்களின் உறுப்பினர்கள் தங்களை ஹிந்து மதத்திடம் இருந்து பிரித்து தனித்துவமான ஒரு வகையான 'சர்நா' என்ற அடையாளத்தைக் குறிப்பிட அனுமதிக்கிறது. இது தங்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி என்று ஷிபு தாமஸ் குறிப்பிடுகிறார். 

 சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் (LPRF)  இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு  கடிதங்கள் எழுதி, ஷிபு தாமஸ் மற்றும் Persecution Releif குறித்தும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 2224 சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. 

Courtesy: The Commune magazine

Similar News