கிருஸ்தவ மிஷனரிகளைக் கண்டித்து இலங்கை இந்துக்கள் நடத்திய விழிப்புணர்வுக் கூட்டம்!
பிரிவினைவாத கும்பல்கள் தமிழை வைத்து அரசியல் செய்வதற்கு இலங்கைத் தமிழர் பிரச்சனைதான் பொதுவில் ஊருகாயாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இலங்கையைச் சேர்ந்த தமிழர்களே தங்களை இந்துக்கள் என்றுதான் கூறிவருகிறார்கள் என்பதே உண்மை.
ஆம்… தமிழகத்திலுள்ள இந்துக்கள்தான் போலி பகுத்தறிவுவாதிகளின் பேச்சைக் கேட்டு தங்களுடைய பாரம்பரியத்தை தொலைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இலங்கையில் உள்ள மக்கள் இன்னமும் மிகத் தீவிர இந்துக்களாகவும், தேசப்பற்றுக் கொண்டவர்களாகவுமே இருந்து வருகின்றனர். அதுவும் கால் நூற்றாண்டுகால போர் ஏற்படுத்திய வடுவிற்குப் பிறகும் அவர்கள் இப்படி இருப்பது ஆச்சரியமே! இந்து தர்மத்தின் ஆன்மீக சக்திக்கு இலங்கை இந்துக்கள்தான் மிகப்பெரிய எடுத்துக்காட்டு என்று சிலாகிக்கின்றனர் இருநாடுகளிலும் உள்ள ஆன்மீகப் பெரியவர்கள் மற்றும் இந்து மத ஆதரவாளர்கள்.
ஆனாலும் இலங்கையில் உள்ள இந்துக்களுக்கு பிரச்சனைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. அது கிருஸ்தவ மிஷனரிகளால் நிகழ்த்தப்படும் மதவெறி தாக்குதல்! ஆம்! எப்படி தமிழகத்தில் இந்துக்கள் மீது கிருஸ்தவ மிஷனரிகள் தாக்குதல் நடத்துகிறார்களோ அதேப்போல இலங்கையிலும் இந்துக்கள் மீது நேரடியாக தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கின்றனர். இலங்கை இந்துக்கள் மீதான கிருஸ்தவ மிஷனரிகளின் தாக்குதலைக் கண்டித்தும், இந்துக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கடந்த செப்டெம்பர் 27ம் தேதி இலங்கை இந்துக்கள் சார்பில் மாபெரும் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இலங்கையைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பிரபல ஆன்மீகப் பெரியவர்கள், இந்து இயக்கத் தலைவர்கள் கலந்துக்கொண்ட இந்தக் கூட்டத்தை 'இந்து சமய பாதுகாப்பு பேரவை' ஒருங்கிணைத்து நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டவர் இலங்கையைச் சேர்ந்த சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம். அவர் கூறும்போது, 'இலங்கையில் சில நூறாண்டுகளுக்கு முன்பாகவே போர்ச்சுகீசிய கிருஸ்தவர்கள் இந்துக்களை மதமாற்றுவதற்காக பல விதங்களில் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். புகழ் பெற்ற இந்து ஆலயங்களை தகர்த்துவிட்டு அங்கே சர்சுகளை கட்டியுள்ளனர்.