கிருஸ்தவ மதம் பொய் என்பது உலக மக்களுக்கு புரிந்து விட்டது. குறிப்பாக மேற்கத்திய நாட்டிலேயே மக்கள் கிருஸ்தவ மதத்தின் மீதுள்ள பிடிப்பை விட்டுவிட்டனர். ஆனால் இன்னமும் மேற்கத்திய நாடுகளின் அரசாங்கம் மட்டும் கிருஸ்தவ மதத்தை விடாமல் இருகப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கிருஸ்தவ மதம் என்பது இந்து-பவுத்த நாடுகளில் மிகப் பெரிய வியாபாரமாக வளரவும் இந்த நாடுகள் உதவி வருகிறது.
அதற்கு காரணம் இயேசு மீதான நம்பிக்கையெல்லாம் இல்லை. கிருஸ்தவ மதம் உண்மையில் ஒரு மதமே அல்ல. மாறாக மக்களை மனச்சிறைக்குள் தள்ளும் ஒரு அரசியல் ஆயுதம் என்பதை மேற்கத்திய நாடுகள் நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றன. ஆக, இந்து – பவுத்த நாடுகளில் எந்தளவிற்கு கிருஸ்தவ மதத்தை பரப்ப முடிகிறதோ அந்தளவிற்கு அந்த நாடுகளை, மேற்கத்திய நாடுகள் மறைமுக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். இதன்மூலம் இந்து – பவுத்த நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களை முடக்க முடியும். நினைத்த நேரத்தில் அரசாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்யவைக்க முடியும். தங்களுக்கு சாதகமான திட்டங்களை செயல்படுத்த முடியும்.
மொத்தத்தில் அந்த நாடுகளின் வளத்தை கொள்ளையடித்தபடியே, அந்த மக்களை உருப்படாமல் செய்ய முடியும். இதற்காகத்தான் மேற்கத்திய நாடுகள் சோறு போட்டு கிருஸ்தவ மிஷனரிகளை தற்போது வளர்த்து வருகின்றனர்.
நம்ப முடியவில்லையா? ஒரு உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக்கொள்வோமே… இந்தியா அணு உலை மின் உற்பத்தியை பெருக்குவதற்காக கூடன்குளம் என்ற மீனவ கிராமத்தை தேர்ந்தெடுத்தது. பல ஆயிரம் கோடி செலவு செய்து அணு உலை கட்டப்படும்வரை யாரும் மூச்சு விடவில்லை. சரி… விரைவில் அணு உலையை திறக்கலாம் என்று நினைத்தபோது, திடீரென்று உள்ளூர் மக்கள் சர்ச்சுகளில் கூட்டப்பட்டனர். அவர்களுக்கு அணு உலை பற்றிய அச்சமூட்டும் தகவல்கள் பகிரப்பட்டது. தொடர்ந்து கூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அனைத்து போராட்டத்தையும் ஒருங்கிணைத்தவர் உதயகுமார் என்பவர். அவர் ஒரு கிருஸ்தவ அபிமானி. பணம் வாங்கிக்கொண்டு அவர் போராட்டம் நடத்துவதை ஒரு தனியார் செய்தி நிறுவனம் ஸ்டிங் செய்து வெளியிட்டது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னனி பத்திரிக்கையான குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு அவர் அளித்த ஒரு பேட்டியில் எனது போராட்டங்களுக்கு துணை நின்றவர்கள் கிருஸ்தவர்களே என்று முழங்கியிருக்கிறார்.
அதாவது அணு உலை பற்றிய பயம் நிஜமாலுமே இருந்திருந்தால், அரசாங்கம் கூடன்குளத்தை தேர்ந்தெடுத்தபோதே தங்களது பயத்தை வெளியிட்டிருக்கலாம். ஆனால் பல ஆயிரம் கோடிகளை செலவழித்த பிறகு அந்தத் திட்டத்தை முடக்க நினைப்பதன் பின்புலத்தில் பல அரசியல் காரணங்கள் உண்டு! அந்த அரசியல் அரிப்புகளுக்கு கிருஸ்தவ மிஷனரி கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது என்பதே யதார்த்தம்.