அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்த சர்ச் - அம்பலமாக்கும் LRO! @Legallro

Update: 2021-04-08 09:09 GMT
அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்த சர்ச் - அம்பலமாக்கும் LRO! @Legallro

இந்தியாவில், ஏன் உலகமெங்கிலும், சர்ச்சுகளின் சொத்துகளும் நிலங்களும் கணக்கிலடங்காதவை. 99 வருடங்களுக்கு லீஸ் என குத்தகைக்கு எடுத்த நிலங்கள் ஆனாலும் சரி, அடுத்தவரின் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்வதாக இருந்தாலும் சரி, அரசாங்கத்தின் புறம்போக்கு நிலத்தில் வெளிநாட்டு நிதியை கொண்டு பள்ளிகள், தேவாலயங்கள் எழுப்புவதும் சரி, நிறைய முறைகேடுகள் நடக்கும் செய்திகளை நாம் பார்த்து வருகிறோம்.

வெளிநாட்டு நிதிகளை சட்டவிரோதமாக, முறைகேடாக பயன்படுத்தும் தன்னார்வ அமைப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் சட்ட உரிமைகள் கண்காணிப்பகம் (Legal rights LRO) அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கானபாரியில், ஒரு பாப்டிஸ்ட் தேவாலயம் அரசாங்க நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து ஒரு தேவாலயத்தை கட்டி வருகிறது.

இது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ள LRO, அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த முறைகேடு நடந்து இருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைப்பதாக தெரிவித்துள்ளது. அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நடக்க ஆயத்தமாக இருப்பதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் பல இடங்களில் ஆக்கிரமித்து செய்வதில் சர்ச்சுகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News