முன்னாள் வக்போர்டு தலைவர் இந்து மதத்தை தழுவினார்! அவரது தலைக்கு ருபாய் 50 லட்சம் பரிசு அறிவித்த முன்னாள் காங்கிரஸ் கட்சி நிர்வாகி !

Update: 2021-12-06 13:14 GMT

நாடு முழுதும் பேசு பொருளான முன்னாள் ஷியா வக்போர்டு தலைவர் வாசீம் ரிஸ்வி, தன் இஸ்லாமிய பெயரை உத்தரவிட்டு  "ஹர்பிர் நாராயண் சிங் தியாகி"  என்று   மாற்றிக் கொண்டு முறைப்படி  இந்து மதத்தை தழுவினார்.

வாசிம் ரிஸ்வி சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில், இஸ்லாம் மதத்தின் வழிபாட்டு புனித நூலான குரானில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட இருபத்தி ஆறு வசனங்கள், தீவிரவாதத்தை ஆதரிப்பதாக கருதியுள்ளார். இதனால்   அந்த  வாசகங்களை   குரானில் இருந்து நீக்க வேண்டும் என்று  வழக்குத்  தொடுத்திருந்தார். ஆனால் உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தும், மேலும் அவருக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் விதித்தது.


இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, வாசிம் ரிஸ்வி காணொளி ஒன்றில் பகிரங்க கருத்துக்களை வெளியிட்டார் அதில் அவர் கூறியதாவது : நான் செய்த மிகப்பெரிய குற்றம், உச்சநீதிமன்றத்தில், குரானில் இடம்பெற்றுள்ள 26 வசனங்களை எதிர்த்து நான் வழக்குத் தொடர்ந்தது தான். இதனால் இஸ்லாமியர்கள் என்னைக் கொல்லத் துடிக்கிறார்கள். நிச்சயமாக தெரியும் அவர்களின் சுடுகாட்டில் எனது உடலுக்கு இடமில்லை என்று.


இதையடுத்து அவர் இந்து மதத்திற்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்த துவங்கினார். அவர் தான் இறந்த பிறகு தன் உடல் புதைக்கக் கூடாது என்றும், மாறாக இந்து மத முறைப்படி உயிரற்ற தன் உடல் எரியூட்டப்பட வேண்டும் என்று தன் கருத்தை தெரிவித்தார். மேலும் அவர்  "என் உயிரற்ற உடலை, நர்சிங் ஆனந்தகிரி தான் கொல்லி வைக்க வேண்டும் " என்று தன் விருப்பத்தையும் பதிவுசெய்துள்ளார்.


ரிஸ்விக்கு,  நர்சிங் ஆனந்தகிரி என்ற இந்து மத குருவின்  மீது மதிப்பும் மரியாதையும் இருப்பதாக தெரிகிறது, அதனால் தான்  ரிஸ்வியின்  மத மாற்ற சடங்கு முறையை நர்சிங் ஆனந்தகிரி செய்து முடித்ததாக கூறப்படுகிறது.

இன்று ரிஸ்வி திட்டமிட்டபடி, தன் " வாசீம் ரிஸ்வி " என்ற அவரது பெயரை "ஹர்பிர் நாராயண் சிங் தியாகி" என்று மாற்றிக்கொண்டு முறைப்படி இந்து மதத்தை தழுவினார்.


இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  முகமது பெரோஸ்  கான்,."வாசீம் ரிஸ்வியின் தலையை எடுத்து வருபவர்களுக்கு ருபாய் 50  லட்சம்  பரிசு"  என்று பகிரங்கமாக காணொளி ஒன்றில் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள்  வக்போர்டு தலைவர்,  இந்து மதத்தை தழுவியதும், அதை எதிர்த்து அவருக்கு எதிராக பகிரங்கமாக தொடுக்கப்படும் மிரட்டல்களும் நாடு  முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.  

Tags:    

Similar News