ஸ்டாலின், உதயநிதி வசிக்கும் தேனாம்பேட்டை வீடு குறித்து எழும் சர்ச்சைக்குரிய கேள்விகள்! யாருடைய பணம்? - புரியாத புதிர்!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் குடும்பம் வசித்து வரும் பெரிய பங்களா யாருக்கு சொந்தமானது என்பது குறித்து 2016 முதலே கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.
2016-ல் ஸ்டாலின் தன்னுடைய சொத்து மதிப்பு ₹5.8 கோடி என வேட்பு மனு தேர்தல் பத்திரத்தில் (affidavit) குறிப்பிட்டிருந்தார். இது எப்படி சாத்தியம் என பொது மக்கள் பலரும் 'அறப்போர் இயக்கம்' என்ற அமைப்பிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். ஏனெனில் சித்தரஞ்சன் சாலையில் உள்ள பங்களாவின் தற்போதைய மதிப்பு மட்டுமே ₹20 கோடியை தாண்டும்.
The DMK's M. K. Stalin has declared assets of Rs 5.8 crores in his affidavit. Many of the public who read this...
Posted by Arappor - அறப்போர் இயக்கம் on Friday, 13 May 2016
இந்த சொத்து யாருடையது என அறிய அறப்போர் இயக்கம் முடிவு செய்தது. அந்த தேடலில் அந்த வீடு 'ஸ்னோ ஹௌசிங் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தால் 2007-ல் ₹11.62 கோடிக்கு வாங்கப்பட்டதாகத் தெரிய வந்தது. இந்த நிறுவனத்தின் முக்கியமான இயக்குனர்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆவர்.
இந்த நிறுவனத்திற்கு இந்த பங்களாவை வாங்க எங்கிருந்து பணம் வந்தது? அங்கு தான் திருப்பம். உதயநிதி ஸ்டாலின் தான் இந்த கம்பெனிக்கு ₹10.34 கோடியை தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கி இருக்கிறார். இப்பொழுது இந்த ஸ்னோ ஹௌசிங் நிறுவனம் துர்கா ஸ்டாலினுக்கு இந்த வீட்டை வாடகை இல்லாமல் வசிக்கக் கொடுத்திருக்கிறது.
இதில் சுவாரசியமான விஷயமாக, இந்த நிறுவனம் இந்த வீடு வாங்கும் பணப்பரிமாற்றத்தை செய்ததை தவிர வேறு எதையும் செய்ததாக தெரியவில்லை. 2007-இல் இந்த பணப் பரிமாற்றம் நிகழ்ந்த பொழுது, உதயநிதி ஸ்டாலின் எந்த படத்திலும் நடிக்கவில்லை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனமும் அப்பொழுது ஆரம்பிக்கப்படவில்லை.