செப்டிக் டேங்க் அருகில் சமையல், கழிவறையில் காய்கறி, மளிகை சாமான்கள் - கிருஷ்ணகிரி அரசு பள்ளியின் அவல நிலை
கிருஷ்ணகிரி பள்ளியில் சத்துணவு கூடமாக கழிவறைகள் மாறி உள்ளது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி பள்ளியில் சத்துணவு கூடமாக கழிவறைகள் மாறி உள்ளது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சத்துணவு கூடங்கள் முறையாக கண்காணிக்கப்படாத நிலையில் போதிய நிதி ஒதுக்கப்படாத காரணத்தால் கழிவறைக்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் சில சத்துணவு கூடங்கள் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் அருகே கெலமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மதாத்தனுர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு கூடத்திற்கு தனியே சமையலறை கட்டப்படவில்லை இதனால் இன்றளவும் கழிவறைக்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் மாணவர்களுக்கு சத்துணவு சமைக்கப்படுகிறது.
மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திய பிறகும் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களில் சத்துணவு கூட்டத்திற்கு தனியாக கட்டட கட்ட நிதி ஒதுக்கப்படவில்லை என தன் பெயர் வெளியிட விரும்பாத சத்துணவு பணியாளர் ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சத்துணவு ஊழியர் கூறியதாவது ஓசூரை சுற்றியுள்ள கிராமத்திலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளி உயர்நிலைப் பள்ளி அந்தஸிலிருந்து மேல்நிலைப்பள்ளி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுகிறது. ஆனால் சத்துணவு கட்டிடம் கட்ட பெரும் கட்டுவதற்கு நிதி ஒதுக்கவில்லை இதனால் பள்ளிக்கு பின்புறமாக மாணவர்கள் பயன்பாட்டுக்கு இல்லாத புதிதாக கட்டப்பட்ட கழிவறையை சமையல் கூடமாக மாற்றினோம்.
மேலும் சத்துணவுக்கு தேவையான காய்கறிகள், அரிசி பருப்புகள் உள்ளிட்ட சாமான்களை தனித்தனி கழிவறை அறைக்குள் பாதுகாத்து வைத்துள்ளோம். இந்த கழிவறை வளாகத்தின் வெளியே உள்ள செப்டிக் டேங்க் கழிவுத்தொட்டி அருகே மாணவர்களுக்கு சமையல் செய்யும் நிலை இன்றும் தொடர்கிறது என்று அந்த ஊழியர் பரிதாபமாக கூறினார்.
பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தாலும் சமூக நலத்துறை அலட்சியத்தாலும் இது போன்ற அவலங்கள் தொடர்வது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.